Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமல்ஹாசன் குரலில் கவனம் ஈர்க்கும் கார்த்தியின் ‘மெய்யழகன்’ பட பாடல்!

vinoth
திங்கள், 2 செப்டம்பர் 2024 (13:22 IST)
96 படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குனர் பிரேம்குமார் தற்போது கார்த்தி, அரவிந்த் சாமி நடிப்பில் ‘மெய்யழகன்’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார்.  படத்தில் மற்ற முக்கிய வேடங்களில் ராஜ்கிரண் மற்றும் ஸ்ரீதிவ்யா ஆகியோர் நடிக்கின்றனர். படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். இந்த படத்தை சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

படத்தின் முதல் லுக் போஸ்டர்கள் வித்தியாசமாக உருவாக்கப்பட்டு வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. மெய்யழகன் திரைப்படம் செப்டம்பர் 27 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் நேற்று முன்தினம் இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா கோயம்புத்தூரில் நடந்தது. அதில் படத்தின் கலைஞர்கள் கலந்துகொண்டு பேசியது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது.

இந்நிலையில் மெய்யழகன் படத்தில் கோவிந்த் வசந்தா மற்றும் கமல்ஹாசன் குரலில் உருவாகியுள்ள “போறென் நான் போறென்” என்ற பாடல் இப்போது ரசிகர்களைக் கவர ஆரம்பித்துள்ளது. அதிலும் குறிப்பாக பாடலில் கமல் குரல் வரும் இடங்கள் மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக உள்ளதாக ரசிகர்கள் சிலாகிக்கத் தொடங்கியுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹேமா கமிஷனில் வாக்குமூலம் அளித்த 20 சாட்சிகள்.. சிக்கலில் திரையுலக பிரபலங்கள்..!

தனுஷின் 52வது படத்தின் டைட்டில் இதுதான்.. இசையமைப்பாளர் யார்?

நடிகைகள் குறித்து அவதூறுப் பேச்சு: மன்னிப்பு கோரினார் டாக்டர் காந்தராஜ்

அனிகா சுரேந்திரனின் லேட்டஸ்ட் வைரல் போட்டோஷூட் ஆல்பம்!

கிளாமர் உடையில் துஷாராவின் ஸ்டைலிஷான போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments