Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கார்த்தியின் மெய்யழகன் பட ஆடியோ ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!

கார்த்தியின் மெய்யழகன் பட ஆடியோ ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!

vinoth

, வியாழன், 29 ஆகஸ்ட் 2024 (13:59 IST)
96 படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குனர் பிரேம்குமார் தற்போது கார்த்தி, அரவிந்த் சாமி நடிப்பில் ‘மெய்யழகன்’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார்.  படத்தில் மற்ற முக்கிய வேடங்களில் ராஜ்கிரண் மற்றும் ஸ்ரீதிவ்யா ஆகியோர் நடிக்கின்றனர். படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். இந்த படத்தை சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

படத்தின் முதல் லுக் போஸ்டர்கள் வித்தியாசமாக உருவாக்கப்பட்டு வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. மெய்யழகன் திரைப்படம் செப்டம்பர் 27 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் படத்தின் ஆடியோ ரிலீஸ் தேதியைப் படக்குழு இப்போது அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 31 ஆம் தேதி இந்த படத்தின் ஆடியோ வெளியீடு நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூப்பர்ஹிட் டிமாண்டி காலணி 2 படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி இதுவா?