Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தாய்க்குலம் சொல்லும் தீர்ப்பு மிக விரைவில்: கமல்ஹாசன் டுவீட்

Advertiesment
கமல்ஹாசன்
, வெள்ளி, 15 மே 2020 (20:11 IST)
தமிழகத்தில் மதுபான கடைகளை திறக்க தடை இல்லை என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டதை அடுத்து நாளை முதல் மதுக்கடைகள் திறக்க அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு செய்து வருகிறது. மேலும் மது வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் சில கட்டுப்பாடுகளையும் தெரிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளுக்கு தடை உத்தரவு பிறப்பித்த போது ஆவேசமாக வெற்றிக்களிப்பில் டுவிட் செய்த கமலஹாசன், உச்சநீதிமன்றம் டாஸ்மாக் கடையை திறக்க உத்தரவு பிறப்பித்துள்ளதை அடுத்து உத்தரவு குறித்து எந்த விமர்சனமும் செய்யாமல் தமிழக அரசை மட்டும் கண்டனம் கூறி  இரண்டு டுவிட்டுக்களை அடுத்தடுத்து பதிவு செய்துள்ளார்
 
அதில் அந்த இரண்டு டுவிட்டுக்களில் அவர் கூறியிருப்பதாவது: உயர் நீதிமன்றத்தில் பதிலளிக்க அவகாசம் வேண்டும் என்று இழுத்தடித்து, உச்ச நீதிமன்றத்தில் இடைகாலத்தடை வாங்கி விட்டது தமிழக அரசு. மக்கள் நலனில் என்றுமில்லாத உத்வேகத்தை, மதுக்கடை திறப்பில் காட்டும் இந்த அரசுக்கு தீர்ப்பு வழங்க, இனி மக்களே, நீதி மய்யமாக மாற வேண்டிய நேரம் வந்து விட்டது.
 
மதுக்கடைகளை மூடியதற்கு தமிழகமெங்குமுள்ள தாய்க்குலம் வாழ்த்துச் சொன்னது. திறந்ததற்கான தீர்ப்பை அதே தாய்க்குலம் சொல்லும், மிக விரைவில். அப்போது நீங்கள் அம்மாவின் பிள்ளை வேஷம் போட்டுத் தப்பிக்க முடியாது.
 
இந்த இரண்டு டுவீட்டுகளும் தற்போது வைரலாகி வருகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அந்த அழகிய போட்டோ ஷூட் இப்படித்தான் உருவாச்சு.... மேக்கிங் வீடியோ வெளியிட்ட ரெஜினா!