Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இங்கிலாந்து ராணி மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்!

Advertiesment
kamal elizabeth1
, வெள்ளி, 9 செப்டம்பர் 2022 (10:50 IST)
இங்கிலாந்து ராணி மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்!
இங்கிலாந்து ராணி எலிசபெத் அவர்கள் நேற்று காலமான நிலையில் அவரது மறைவிற்கு கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது.
 
எழுபதாண்டுகளாக இங்கிலாந்தின் மகாராணியாக திகழ்ந்த இரண்டாம் எலிசபெத் இயற்கை எய்திய செய்தியைக் கேட்டு துயருற்றேன். ஆங்கிலேயர்கள் மட்டுமல்லாது, அகில உலகத்தவரின் நேசத்தையும் பெற்றவராக அவர் விளங்கினார். 
 
25 ஆண்டுகளுக்கு முன்னர் எங்களது அழைப்பை ஏற்று மருதநாயகம் திரைப்படத்தின் தொடக்கவிழாவில் கலந்துகொண்டு வாழ்த்தினார். அனேகமாக அவர் கலந்து கொண்ட ஒரே திரைப்பட படப்பிடிப்பு அதுதான்.
 
5 ஆண்டுகளுக்கு முன்னர்  லண்டனில் நடந்த கலாச்சார நிகழ்வில் அரண்மனையில் அவரை சந்தித்துப் பேசியது இன்னமும் பசுமையாக நினைவிருக்கிறது. தங்கள் பிரியத்திற்குரிய ராணியை இழந்து வாடும் இங்கிலாந்து மக்களுக்கும், அரச குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆர்யாவின் கேப்டன் படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் இப்படிதான் உருவாக்கப் பட்டதா?