ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு நடிகை காஜல் அகர்வால் ட்விட்டர் மூலம் பதில் அளித்து வருவதால் ரசிகர்கள் பலர் ட்விட்டரில் குவிய தொடங்கியுள்ளனர்.
தமிழ் திரையுலகில் பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் காஜல் அகர்வால். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார் காஜல் அகர்வால். இதனால் அவருக்கு இந்திய அளவில் எக்கச்சக்கமான ரசிகர்கள் உள்ளனர். அவரது ரசிகர்கள் அவரது ட்விட்டர் மற்றும் இண்ஸ்டாகிராம் பதிவுகளுக்கு தொடர்ந்து பதிலளித்து வருகின்றனர்.
இந்நிலையில் காஜல் அகர்வால் தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய அறிவிப்பு ஒன்றை பதிவிட்டார். ”ரசிகர்கள் என்னிடம் கேட்க விருப்பப்படும் கேள்விகளை #AskKajal என்ற ஹேஷ்டேகில் ட்விட்டரில் பதியலாம். அந்த கேள்விகளுக்கு இன்று மாலை நான் பதிலளிப்பேன்” என்று கூறியிருந்தார்.
இதனால் உற்சாகமான ரசிகர்கள் பல்வேறு கேள்விகளை முன்வைத்து காஜல் அகர்வால் ஹேஷ்டேகை பிரபலப்படுத்தினார்கள். தற்போது காஜல் அகர்வால் அவரது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வருகிறார். அதில் “உங்களுக்கு பிடித்தமான உணவு எது? ஹாலிவுட் நடிகர் யார்?” என்பது போன்ற பல்வேறு கேள்விகளை ரசிகர்கள் கேட்டுள்ளார்கள். அதில் ஒருவர் “உங்க டூத் பேஸ்ட்டில் உப்பு இருக்கா?” என காஜலுக்கு கேள்வி கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த காஜல் “உப்பு மட்டும் இல்லை இன்னும் நிறைய பொருட்களும் இருக்கிறது” என்று கூலாக பதில் சொல்லியுள்ளார்.