கடந்த சில நாட்களாகவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படும் டாஸ்க் கடினமானதாகவும் , ஸ்வாரஸ்யமாகவும் உள்ளது.
போட்டி முடிவை நெருங்க நெருங்கத்தான் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நகர்கிறது. அந்த வகையில் தற்போது வெளிவந்துள்ள மூன்றாவது ப்ரோமோவில், கவினுடன் சண்டையிட்டு டாஸ்க்கை பாதியில் நிறுத்திவிட்டு கோபித்துக்கொண்டு சென்ற ஷெரினை தர்ஷன் சமாதானம் செய்கிறார். " இங்க கேம் ஆட வந்திருக்காங்களா என்ன பண்ண வந்திருக்காங்க.? எல்லாரும் ஆதி வாங்கிட்டு தான விளையாடிட்டு இருக்காங்க.. அப்பறோம் அவங்க என்ன அப்டி நடிக்குறாங்க .. என்று கத்தி கத்தி பேசிக்கொண்டிருக்கும் போது தர்ஷன், " இப்படி ஒரு அழகான பொண்ணுக்கு கோபம் வரலாமா என்று அவரை சாமாதானம் செய்கிறார். உடனே ஷெரின் புன்னகைக்கிறார்.
இந்த வீடியோவை கண்ட நெட்டிசன்ஸ் கேம் விளையாட வந்திருக்காங்களான்னு கேட்டுட்டு இங்க நீ என்னமா பண்ணற ஷெரின் என ட்ரோல் செய்தாலும் ஒரு சிலர் ஷெரினுக்கு ஆதரவாக கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.