Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்கும் சத்யபாமா படத்தின் போஸ்டர் ரிலீஸ்!

Webdunia
செவ்வாய், 7 நவம்பர் 2023 (10:24 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை காஜல் அகர்வால் முன்னணி நடிகர்கள் பலருடன் சேர்ந்து நடித்துவிட்டார். தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் போன்ற வேற்று மொழி படங்களிலும் நடித்து தூள் கிளப்பி வருகிறார் காஜல்.

இந்நிலையில் கடந்த லாக்டவுனின் போது அவர் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டார். அதையடுத்து கர்ப்பமான அவர், அதை ரசிகர்களுக்கு அறிவித்து, கர்ப்பகால புகைப்படங்களையும் பகிர்ந்திருந்தார். அதையடுத்து சமீபத்தில் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

அந்த குழந்தைக்கு நீல் என பெயர் வைத்துள்ளனர். இதையடுத்து இதுவரை காஜல் தனது குழந்தையின் முகம் தெரியாதவாறு இருக்கும் புகைப்படங்களையே பகிர்ந்து வந்த நிலையில், சமீபத்தில் முதல் முறையாக குழந்தையின் முகம் தெரியும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

இப்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வரும் காஜல் அகர்வால் சத்யபாமா என்ற படத்தில் கதையின் நாயகியாக நடிக்கிறார். போலீஸ் அதிகாரியாக இந்த படத்தில் நடிக்கும் காஜல் அகர்வாலின் கதாபாத்திர லுக் தற்போது வெளியாகி கவனம் பெற்றுள்ளது. இந்த படத்தை இயக்குனர் சுமன் சிக்கலா இயக்குகிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

96 படத்தின் இரண்டாம் பாகத்தின் அப்டேட் கொடுத்த பிரேம்குமார்… VJS இருப்பாரா?

வட்டத்துக்குள் சிக்காமல் இருப்பதே சுதந்திரம்… மற்றவர்களின் கருத்துக்கு எதற்குக் கவலை? –சமந்தா ஓபன் டாக்!

நா முத்துக்குமார் நினைவு இசை நிகழ்ச்சியில் கமல் முதல் தனுஷ்வரை… திரைத்துறையினரின் பட்டியல் வெளியீடு!

ஜூனியர் என் டி ஆர் படத்தில் கதாநாயகியாக இணைந்த ருக்மிணி வசந்த்!

புதிய வடிவத்தில் மீண்டும் ரிலீஸாகும் ‘அஞ்சான்’… இயக்குனர் லிங்குசாமியின் நம்பிக்கை வெற்றி பெறுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments