Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காதல் படத்தின் இரண்டாம் பாகம் பற்றி அறிவித்த பிரபல நடிகர்!

Advertiesment
காதல் படத்தின் இரண்டாம் பாகம் பற்றி அறிவித்த பிரபல நடிகர்!
, புதன், 14 ஜூன் 2023 (07:41 IST)
சாமுராய் என்ற தோல்வி படத்தின் மூலம்தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் பாலாஜி சக்திவேல். இதனால் அடுத்த படத்தில் இருந்து தன்னுடைய ரூட்டை மாற்றிக்கொண்ட அவர் காதல், வழக்கு எண் மற்றும் கல்லூரி உள்ளிட்ட எதார்த்த வகை படங்களை இயக்க ஆரம்பித்தார்.

ஆனால் சமீபகாலமாக அவரது படங்கள் எதுவுமே ரிலீஸ் ஆகவில்லை. சமீபத்தில் மாடர்ன் லவ் ஆந்தாலஜியில் அவர் இயக்கிய திரைப்படம் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் அவர் ஹிட் படமான காதல் படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது.

காதல் படத்தில் நடித்த சுகுமார் தன்னுடைய முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார். அந்த பதிவில் “காதல் சந்தியா என்கிற ரேவதி இப்போ என்ன பண்றார்னா குடும்ப வாழ்க்கைல பிஸியாகஉள்ளார் . படப்பிடிப்பில் நான் தருண்கோபி மாம்ஸ்சின் திமிரு 2 படத்தில் பார்த்தது. சந்திரசேகர் என்பவரை காதலித்து மணந்து ஒரு குழந்தைக்கு தாயாகி மகிழ்ச்சிகரமான வாழ்க்கையில் இருக்கிறார்.

காதல் படத்தில் முதலில் கதாநாயகி தோழியாக வரும் சரண்யாதான். ஆனால் படப்பிடிப்புக்கு ஒரு நாள் முன்பாக பத்தாவது படித்துக்கொண்டிருந்த சந்தியா  ஸ்கூல் யூனிபார்மில் கேமராமேன் விஜய் மில்டன் மூலமாக ஆபீஸ் வர அவர்தான் கதாநாயகி என இயக்குநர் முடிவெடுத்து நடிக்க வைத்துவிட்டார்.

சந்தியா பிரமாதமான பாடகியும் கூட... தமிழ் கூறும் நல்லுலகிற்கு ஒரு செய்தி.. "காதல்" இரண்டாம் பாகம் படப்பிடிப்பிற்கு  ஆயத்த நிலையில் உள்ளதாக இயக்குனர் பாலாஜிசக்திவேல் சார் சொல்லியிருக்கார்..!!  #சார் நான் இருக்கேனா??” என பதிவிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கமல்ஹாசன் முன்னிலையில் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்த பிரபல நடிகை!