Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு நடனம் ஆடிய ஜோதிகா

Webdunia
வெள்ளி, 3 ஆகஸ்ட் 2018 (13:47 IST)
சென்ற வருடம் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற பாடலான  ஜிமிக்கி கம்மலுக்கு தமிழகமே நடனமாடி தலையசைத்தது. மலையாள தேசத்தில் தயாராகி வந்த இந்த பாடலுக்கு கிடைத்த வரவேற்பு  மிகப்பெரியது. இளைஞர்களுக்கு மிகவும் பிடித்தமான இப்பாடலை மீண்டும் அவர்கள் கொண்டாடும் நேரம் வந்துவிட்டது. ஆம் , ஜோதிகாவின் “ காற்றின் மொழி “ திரைப்படம் மூலம் நாம் எல்லோரும் ஜிமிக்கி கம்மல் பாடலை மீண்டும் கேட்டு ரசிக்க போகிறோம். சமீபத்தில் நடன இயக்குனர் விஜியின் நடன வடிவமைப்பில் ஜோதிகா , லட்சுமி மஞ்சு , சிந்து ஷியாம் , குமரவேல் மற்றும் ஆர்.ஜெ சான்ட்ரா இப்பாடலுக்கு நடனமாடினர்.



இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் ஒரே ஷெட்யூலில் இப்படத்தின் படப்பிடிப்பு  நிறைவடைந்தது. ஜி. தனஞ்ஜெயன் , லலிதா தனஞ்ஜெயன் , விக்ரம்குமார் ஆகியோர் பாப்டா மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் நிறுவனம் சார்பில் இப்படத்தை  தயாரித்துள்ளனர். நாயகி ஜோதிகா மற்றும் படக்குழுவினர் இப்படத்தை வேகமாகவும் , சிறப்பாகவும் முடித்து தந்துள்ளனர்.

ஏற்கனவே நாயகி ஜோதிகாவுக்கு கேரளாவில் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. இதோடு சேர்த்து ஜிமிக்கி கம்மலும் வரும் போது அதை கேரள ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு விருந்து காத்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.


விதார்த் , லட்சுமி மஞ்சு என்று முன்னணி நட்சத்திரங்களோடு நடிகர் சிம்பு இப்படத்தில் கெளரவ வேடமேற்று நடித்துள்ளார். இசை புயல் ஏ.ஆர். ரஹ்மான் குடும்பத்தை சேர்ந்த A.H. காஷிஃப் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். 84 மில்லியன் ரசிகர்களை தாண்டி இன்னும் பலர் பார்த்து  ரசித்துக்கொண்டிருக்கும்  மாபெரும் புகழ் பெற்ற “ ஜிமிக்கி கம்மல் “ மலையாள  பாடலின்  உரிமையை சத்யம் ஆடியோஸ் நிறுவனத்திடமிருந்து பாப்டா மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் தனன்ஞ்ஜெயன் முறைப்படி பெற்றுள்ளார். இப்படத்தின் பாடல் உரிமையை லஹரி நிறுவனம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரைலர் வெளியீடு பற்றிய தகவல்  செப்டம்பர் மாதத்தில் வெளியாகும். அக்டோபர் 18 வெளியீடாக படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவெடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்பு & ராம்குமார் பாலகிருஷ்ணன் கூட்டணியில் உருவாகும் படத்தின் ரிலீஸ் அப்டேட்!

என்னுடைய படத்தில் சாய் பல்லவியைக் கதாநாயகியாக நடிக்கவைக்க ஆசைப்பட்டேன் – இயக்குனர் சந்தீப் ரெட்டி!

நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீஸாகும் மாதவன் & சித்தார்த்தின் ‘டெஸ்ட்’ திரைப்படம்!

சிம்புவின் 51வது படத்தின் அறிவிப்பு.. துள்ளி குதிக்கும் ரசிகர்கள்..!

சுமார் 3 நிமிட ’விடாமுயற்சி’ வீடியோ.. படப்பிடிப்பின் போது இவ்வளவு சவால்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments