Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல மலையாள நடிகை சாலை விபத்தில் பலி

Webdunia
வெள்ளி, 3 ஆகஸ்ட் 2018 (13:42 IST)
கேரள திரையுலகில் மிகப் பிரபலமான நடிகையும், பாடகியுமான மஞ்சுஷா மோகந்தாஸ் சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கேரளாவில் தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற ஸ்டார் சிங்கர் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது தனித்திறமையான குரலின் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்திழுத்தவர் தான் மஞ்சுஷா மோகன் தாஸ்.
 
இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த மஞ்சுஷா பல மலையாள படங்களிலும் நடித்துள்ளார். தனது வெற்றியின் சுவையை அனுபவிப்பதற்கு முன்பே விதி அவரை கூட்டிச் சென்றுவிட்டது. ஆம் மஞ்சுஷா தற்போது நம்முடன் இல்லை.
 
தோழியுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற மஞ்சுஷா விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், ஒரு வாரத்திற்கு பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். மஞ்சுஷாவிற்கு திருமணமாகி 2 வயதில் ஒரு மகள் உள்ளார்.
அவரது மரணம் கேரள திரையுலகை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. மஞ்சுஷாவின் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’கங்குவா’ தோல்விக்கு பின் மீண்டெழுந்த சூர்யா.. ‘கருப்பு’ பிசினஸ் அமோகம்..!

’வாடிவாசலை அடுத்து சிம்பு - வெற்றிமாறன் படமும் டிராப்பா? கோலிவுட்டில் பரபரப்பு..!

ஹோம்லி க்யூன் பிரியங்கா மோகனின் அசத்தல் புகைப்படத் தொகுப்பு!

அழகியே… சிவப்பு நிற உடையில் கலர்ஃபுல் போஸ் கொடுத்த மிருனாள் தாக்கூர்!

மீண்டும் லோகேஷ் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படும் ரஜினிகாந்த்!

அடுத்த கட்டுரையில்
Show comments