Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தக் லைஃப் படத்தில் நான் இருந்தேன்… ஆனா..? – ஜெயம் ரவி வருத்தம்!

தக் லைஃப் படத்தில் நான் இருந்தேன்… ஆனா..? – ஜெயம் ரவி வருத்தம்!

vinoth

, புதன், 23 அக்டோபர் 2024 (07:56 IST)
பொன்னியின் செல்வன் படத்தின் மூலமாக பல ஆண்டுகளுக்குப் பிறகு கமர்ஷியல் வெற்றியைப் பெற்றார் இயக்குனர் மணிரத்னம். இதையடுத்து அவர் இப்போது கமல்ஹாசனை வைத்து தக் லைஃப் படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு திரிஷா, ஜோஜு ஜார்ஜ், கௌதம் கார்த்திக், , அசோக் செல்வன் மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.  ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின் மற்றும் மணிரத்னம் ஆகிய மூவரும் இணைந்து தயாரிக்கின்றனர். படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. படம் அடுத்த ஆண்டு ரிலிஸாகும் என சொல்லப்படுகிறது.

இந்த படத்தில் முதலில் ஜெயம் ரவி மற்றும் துல்கர் சல்மான் ஆகியோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டு, பின்னர் வெளியேறினர். இந்நிலையில் தற்போது அது பற்றி ஜெயம் ரவி பேசியுள்ளார். அதில் “கமல்ஹாசன் சாரின் நடிப்பைப் பார்த்து உத்வேகம் பெற்ற பல நடிகர்களில் நானும் ஒருவன். எனக்கு ஒரே ஒரு வருத்தம் என்னவென்றால் நான் தக்லைஃப் படத்தில் இருந்தேன். ஆனால் ஒரு சில காரணங்களால் வெளியேறிவிட்டேன். அவரோடு இணைந்து நடிக்க முடியவில்லை என்ற ஒருவருத்தம்தான் எனக்கு.” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

20 வருடத்துக்கு முன்பு ரஜினி சார் சொன்ன அட்வைஸைப் பின்பற்றுகிறேன்.. சூர்யா பகிர்ந்த தகவல்!