Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதர் ரிலீஸுக்காக 4 கோடி ரூபாய் தண்டம் கட்டிய ஜெயம் ரவி!

vinoth
ஞாயிறு, 3 நவம்பர் 2024 (09:44 IST)
நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் ராஜேஷ் எம் இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பிரதர்’. இந்த படத்தில் ரவியுடன் பிரியங்கா மோகன், பூமிகா, நட்டி நட்ராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ளனர். அக்கா தம்பிக்கு இடையிலான உறவை சொல்லும் நகைச்சுவை படமாக பிரதர் உருவாகியுள்ளது.

ஜெயம் ரவியின் திரைவாழ்க்கை கடந்த சில ஆண்டுகளாக நேர்மறையாக செல்லவில்லை. பொன்னியின் செல்வன் திரைப்படத்தைத் தவிர வேறு எந்த படமும் அவருக்கு சொல்லிக்கொள்ளும்படி அமையவில்லை. இதனால் பிரதர் படத்துக்கு பெரியலவில் எதிர்பார்ப்பு இல்லை. படத்தில் இடம்பெற்ற மக்காமிஷி என்ற பாடல் சென்சேஷன் ஹிட்டானது மட்டுமே படத்தின் மீதான எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ளது.

இந்நிலையில் படத்தின் ரிலீஸீன் இறுதிகட்டத்தில் பிரச்சனை ஏற்பட அதை சரிசெய்ய ஜெயம் ரவி 4 கோடி ரூபாய் பணத்துக்குப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது.  படத்தின் ரிலீஸ் உரிமையைக் கைப்பற்றிய கோல்ட் மைன் மனிஷ் என்பவர் கடைசி கட்டத்தில் பின்வாங்க, அவருக்குக் கொடுக்கவேண்டிய தொகையில் ஒரு துண்டு விழ, அதைதான் ஜெயம் ரவி தன் பொறுப்பில் ஏற்றுக்கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனாலும் படம் பெரியளவில் வசூலைக் குவிக்காதது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹன்சிகாவின் லேட்ட்ஸ்ட் ஹாட் புகைப்பட ஆல்பம்!

விண்டேஜ் லுக்கில் ஜொலிக்கும் அனுபமா பரமேஸ்வரன்!... கார்ஜியஸ் ஆல்பம்!

சஞ்சய் & சந்தீப் இணையும் படத்தின் ஷூட்டிங் எப்போது?.. வெளியான தகவல்!

பொறுத்தது போதும் என இயக்குனர் அவதாரம் எடுக்கும் சந்தானம்!

இன்று வெளியாகிறது மம்மூட்டி & கௌதம் மேனன் இயக்கும் படத்தின் டீசர்!

அடுத்த கட்டுரையில்
Show comments