Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வொர்க் அவ்ட் ஆகாத ஜானு –பாக்ஸ் ஆபிஸில் பலத்த அடி !

வொர்க் அவ்ட் ஆகாத ஜானு –பாக்ஸ் ஆபிஸில் பலத்த அடி !
, செவ்வாய், 11 பிப்ரவரி 2020 (13:52 IST)
ஜானு படத்தில் சமந்தா மற்றும் சர்வானந்த்

96 படத்தின் தெலுங்கு ரீமேக்கான ஜானு படம் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் எதிர்பார்த்த வசூலைப் பெறவில்லை என சொல்லப்படுகிறது.

நடிகர் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான இருந்த 96 படம் அமோக வரவேற்பை பெற்றதோடு கலெக்ஷனிலும் கல்லா கட்டியது. இப்படத்தில் அமோக வெற்றியை கண்டு பிற மொழி திரைத்துறையினர் தங்கள் மொழிகளில் 96 படத்தை ரீமேக் செய்ய முயற்சித்தனர்.

இதன் தெலுங்கு பதிப்பு சமந்தா மற்றும் சர்வானந்த் நடிப்பில்  ஜானு என்ற பெயரில் உருவானது. தமிழில் இயக்கிய பிரேம் குமாரே ஜானு படத்தையும் இயக்கினார். தமிழில் பெருவெற்றி அடைந்ததை அதிக பட்ஜெட்டில் படம் உருவாக்கப்பட்டது. இந்நிலையில் படம் ரிலிஸாகி நல்ல விமர்சனங்கள் வந்தாலும் வசூல் எதிர்பார்த்த அளவு இல்லை என சொல்லப்படுகிறது.

21 கோடி ரூபாய் செல்வு பண்ணிய படத்தின் வசூல் இப்போது வரை வெறும் 7 கோடி ரூபாய் மட்டுமே வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

“ஆஸ்கரை ஓரமா வச்சிட்டு லவ்வரோடு பர்கர்” ஜோக்கர் நாயகனின் வைரல் புகைப்படம்