Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கார்த்திக் சுப்பராஜ் விஜய்க்கு சொன்ன கதையில் சூர்யா நடிக்கிறாரா?

vinoth
சனி, 30 மார்ச் 2024 (07:29 IST)
சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது கங்குவா திரைப்படம். இந்த படத்தை சிறுத்தை சிவா மிக பிரம்மாண்டமாக இயக்கி வருகிரார்.  இந்த படத்தின் கதைக்களம் நிகழ்காலம் மற்றும் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலம் என இரு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் திஷா படானி மற்றும் பாபி தியோல் ஆகிய பாலிவுட் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

இந்த படத்துக்குப் பிறகு அவர் சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக இருந்த நிலையில் தற்போது அந்த படம் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு தகவலோ அந்த படம் கிடப்பில் போடப்பட்டுவிட்டதாக சொல்கிறது.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் திடீரென சூர்யா கார்த்திக் சுப்பராஜ் கூட்டணியில் ஒரு படம் உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்தின் ஷூட்டிங் மே மாதமே தொடங்க உள்ளதாக சொல்லப்படும் நிலையில் விஜய்க்கு சொன்ன கதையைதான் கார்த்திக் சுப்பராஜ் இப்போது சில மாற்றங்களோடு சூர்யாவை வைத்து இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

20 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகிறதா ‘கஜினி 2’?.. ஏ ஆர் முருகதாஸ், சூர்யா பேச்சுவார்த்தை!

தீபாவளிக்கு ஓடிடியில் ரிலீஸாகும் தங்கலான்… இத்தனைக் கோடியை குறைத்துள்ளதா நெட்பிளிக்ஸ்?

'ஆல் வி இமேஜின் அஸ் லைட்’ திரைப்படம் நவம்பர் 22, 2024 அன்று இந்தியா திரையரங்குகளில் வெளியாகிறது!

அமலாக்கத்துறையால் விசாரிக்கப்பட்ட தமன்னா.. பின்னணி என்ன?

கங்கனாவின் ‘எமர்ஜென்ஸி’ படத்துக்குக் கிடைத்தது சென்சார் சான்றிதழ்!

அடுத்த கட்டுரையில்
Show comments