Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் இணைய உள்ளார்களா தனுஷ் & ஐஸ்வர்யா?

vinoth
செவ்வாய், 17 செப்டம்பர் 2024 (16:04 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர்தனுஷ்.  இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். 18 ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்த இந்த நட்சத்திர தம்பதியினர் கடந்த 2022 ஆம் ஆண்டு பிரிவதாக அறிவித்தனர். இதையடுத்து குழந்தைகள் தாய் ஐஸ்வர்யாவோடு வசித்து வருகின்றனர்

இவர்களை சேர்த்து வைக்க ரஜினி உள்ளிட்ட நெருங்கிய குடும்ப நண்பர்கள் பேச்சுவார்த்தை நடத்தியும் அதில் எந்த பலனும் இல்லை என்று சொல்லப்பட்டு வருகிறது. இந்நிலையில் இவர்கள் பிரிந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இப்போது சேர்வதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

சமீபத்தில் சமூகவலைதளங்களில் தனுஷ் ஐஸ்வர்யாவின் பதிவுகள் மற்றும் புகைப்படங்களுக்கு லைக் செய்து வருகிறார். இதில் சில புகைப்படங்களில் தனுஷின் மகன்கள் இருக்கின்றனர். சில புகைப்படங்களில் ஐஸ்வர்யா மட்டும் தனியாக இருக்கிறார். இதனால் இவர்கள் மீண்டும் இணைந்து வாழ வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

2 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் பிரிவில் வழக்குப்பதிவு: ஏஆர் ரஹ்மான் எச்சரிக்கை..!

கலர்ஃபுல் ட்ரஸ்ஸில் ஹன்சிகாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

வாணி போஜனின் லேட்டஸ்ட் அசரடிக்கும் போட்டோஷூட் ஆல்பம்!

நரகத்துல இருக்குறவனுக்கு சொர்க்கத்தோட சாவி கெடச்சா..?.. எதிர்பார்ப்பைக் கூட்டும் சொர்க்கவாசல் டிரைலர்!

தளபதி 69 பட ஷூட்டிங்கை சீக்கிரம் முடிக்க விஜய் உத்தரவு.. பின்னணி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments