Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கேன்ஸ் திரைப்பட விழாவில் “இரவின் நிழல்” – பார்த்திபன் மகிழ்ச்சி ட்வீட்!

Advertiesment
கேன்ஸ் திரைப்பட விழாவில் “இரவின் நிழல்” – பார்த்திபன் மகிழ்ச்சி ட்வீட்!
, ஞாயிறு, 15 மே 2022 (13:03 IST)
பார்த்திபன் இயக்கி ரிலீஸ் ஆகவுள்ள இரவின் நிழல் படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது.

தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்கள் வரிசையில் உள்ளவர் பார்த்திபன். படங்கள் இயக்கி வரும் இவர் வேறு சில படங்களில் நடித்தும் வருகிறார். முன்னதாக இவர் இயக்கி வெளியான ஒத்த செருப்பு நல்ல விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையில் தற்போது இரவின் நிழல் என்ற படத்தை இயக்கி நடித்தும் உள்ளார் பார்த்திபன். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். தமிழ் சினிமாவில் முதன்முறையாக இந்த படம் 100 நிமிடங்களுக்கு ஒரே ஷாட்டிலேயே படமாக்கப்பட்டுள்ளது.

இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதற்கு முன்னாள் இந்த படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது. இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பார்த்திபன் “சர்வதேச திரைப்பட விழாவான கேன்ஸ் பட விழாவில்  என் "இரவின் நிழல் "திரையிடப்பட உள்ளது என்பதை மகிழ்ச்சி கலந்த உள்ளடக்கத்தோடு தெரிவித்துக்கொள்கிறேன். தமிழோடு கேன்ஸ் பறக்க தயாராகிறேன்” என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கேஜிஎஃப் 3 ரிலீஸ் எப்போது? இப்போவே அறிவித்த தயாரிப்பாளர்!