Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு ஆளுக்காக தனி ஹெலிகாப்டர்… இந்தியன் 2 வில் கமலுக்கு சொகுசு!

Webdunia
புதன், 1 பிப்ரவரி 2023 (14:29 IST)
கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீஸாகவில்லை. படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்துக் காரணமாக மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

இதற்கிடையில் ஷங்கர் தற்போது ராம்சரண் மற்றும் கியாரா அத்வானி ஆகியோர் நடிக்கும் “RC 15” படத்தையும் இயக்கி வருகிறார். வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜுதான் இந்த படத்தையும் தயாரித்து வருகிறார். இந்நிலையில் இப்போது வாரிசு படம் ரிலிஸுக்கு தயாராகி வருவதால், ரிலீஸ் வரைக்கும் ஷங்கர் – ராம்சரண் படத்துக்கு பிரேக் விட்டுள்ளாராம் தில் ராஜு. இதனால் ஷங்கர் விருவிருப்பாக இந்தியன் 2 படத்தை முடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இப்போது திருப்பதியில் இந்த படத்தின் ஷூட்டிங் நடந்துவரும் நிலையில் தனது ஹோட்டலில் இருந்து படப்பிடிப்புத் தளத்துக்கு செல்ல தனி ஹெலிகாப்டர் வசதி செய்து தரப்பட்டுள்ளதாம். இது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அக்ஷய் குமார் பெயரை பயன்படுத்தி தமிழ் நடிகை மோசடியா? தயாரிப்பாளரின் அதிர்ச்சி புகார்..!

3 நாளில் ‘மகாராஜா’ வசூல் இத்தனை கோடியா? தயாரிப்பாளரின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

ஆஹா வழங்கும் ‘வேற மாறி ஆபீஸ் - சீசன் 2’வெப் சீரிஸ் பூஜையுடன் துவங்கியது!

'சௌகிதார்' எனும் புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை 'ரோரிங் ஸ்டார்' ஸ்ரீ முரளி வெளியிட்டார்!

அல்லு அர்ஜூன் படம் டிராப்.. அட்லி அடுத்த படத்தின் ஹீரோ இவர்தான்..!

அடுத்த கட்டுரையில்
Show comments