Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்னும் அப்படியேதான் இருக்கிறார்.. இயக்குனர் ஷங்கர் பற்றி வசந்தபாலன் எமோஷனல் பதிவு

Advertiesment
இன்னும் அப்படியேதான் இருக்கிறார்.. இயக்குனர் ஷங்கர் பற்றி வசந்தபாலன் எமோஷனல் பதிவு
, செவ்வாய், 31 ஜனவரி 2023 (08:22 IST)
தற்போது 27 ஆண்டுகளுக்குப் பிறகு தனது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் செஜண்ட் யூனிட் இயக்குனராக இந்தியன் படத்தில் உதவியாளராக பணியாற்றிய வசந்தபாலன் பணியாற்றுகிறார். இந்நிலையில் இப்போது வசந்தபாலன், ஷங்கர் பற்றி “1995ல் இந்தியன் திரைப்பட படப்பிடிப்பில் பார்த்த அதே மனிதராகவே இருக்கிறார். இயக்குநர் இருக்கையிலிருந்து கேமராவை நோக்கி, நடிகர்களை நோக்கி, துணை நடிகர்களின் ஒழுங்கை சரி செய்ய ஆயிரம் முறை காலை 7 மணியிலிருந்து மாலை 6 மணி வரை ஓடி ஓடி தீராதக் காட்சி ஓவியங்களை வரைந்தவண்ணம் இருக்கிறார்.

காட்சி எழுதப்பட்ட அந்த எழுதட்டையில் அந்த காட்சிக்கான கேமராக் கோணங்கள் பென்சிலால் ஒரு தொழிற்நுட்ப பொறியாளரின் வரைக்கோட்டு சித்திரம் போல வரையப்பட்டிருக்கிறது. அந்த சித்திரங்களுக்கு உயிர் கொடுக்கவே வெயில்,புழுதி,நெருப்பு,புகை,உணவு,குடிநீர் என எதையும் கண்டு கொள்ளாது ஒரு வெறி கொண்ட சிங்கம் போல படப்பிடிப்புத் தளத்தில் ஆங்காங்கே உறுமியபடி திரிகிறார். சிங்கத்தின் அசைவுகளை அருகே இருந்து ரசிக்க ஒரு தருணம் கிடைத்தது. பொன் தருணம். அவர் கண்களில் இன்று புத்தம் புதியதாய் பிறந்த குழந்தையின் ஆர்வமும் மினுமினுப்பும் ஆச்சரியமும் சிரிப்பும் கலந்திருக்கிறது.

அவரின் வெற்றியின் ரகசியம் அது தானோ....ஒரு காட்சித்துணுக்கு நன்றாக வரும் போது மைக்கில் படப்பிடிப்பு தளத்தில் நடித்த அனைவரையும் பாராட்டுகிறார்...அரங்கம் கைதட்டி அதிர்கிறது...மாஸ்டர் பாராட்டும் போது அதை விட ஆடுகளத்திற்கு வேறு என்ன பேரானந்தம். சூரியன் வேறு ஆடை பூண்டு மாலையை மணக்கும் போது மீண்டும் கேப்டனின் குரல் இன்றைய நாளின் படப்பிடிப்பிற்கு ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி என கூறும் போது படப்பிடிப்பு தளமெங்கும் சோர்வு மறைந்து நேர்மறை எண்ணங்கள் மின்மினி பூச்சி போல திசையெங்கும் ஒளிவெள்ளமாய் பரவுகிறது.

படப்பிடிப்பு முடிந்து அனைவரும் கூடடைந்த பிறகும் படப்பிடிப்பு தளத்தில் அடுத்த நாள் காட்சிக்கான தயாரிப்பு வேலைகளை ஒரு உருவம் தனி ஒருவனாய் செய்த வண்ணம் இருக்கிறது. இரவு நீள்கிறது. இந்தியாவின் பெருமைமிக்க இயக்குநராக இருப்பதற்காக அத்தனை தன்மைகளையும் பெருமைகளையும் திறமைகளையும் தன்னுள் கொண்ட இயக்குநர் ஷங்கர் தான் அவர்" என எமோஷனலாக பதிவிட்டுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அய்யோ சிம்ரன் நீங்க இங்கயும் வந்திட்டிங்களா? வனிதாவை வச்சி செய்யுறாங்க!