Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூன்றாண்டுகளுக்குப் பிறகு ரிலீஸுக்கு தயாராகும் விஜய்சேதுபதி படம்?

Webdunia
திங்கள், 8 அக்டோபர் 2018 (10:55 IST)
அனைத்து வேலைகளும் முடிந்தும் ரிலீஸாகாமல் முடங்கிக் கிடக்கும் விஜய் சேதுபதி நடித்துள்ள இடம் பொருள் ஏவல் ரிலீஸுக்கு தயாராவதாக அப்படத்தின் இயக்குனர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.

விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், நந்திதா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் சீனு ராமசாமி இயக்கியப் படம் இடம் பொருள் ஏவல். இப்படத்திற்காக முதல் முறையாக இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவும் வைரமுத்துவும் இணைந்தனர். படத்தின் பாடல்களும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன.

அனைத்து வேலைகளும் முடிந்த நிலையில் ரிலீஸுக்கு தயாராகும் போது படத்தைத் தயாரித்த இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் பொருளாதாரப் பிரச்சனையில் சிக்க படம் ரிலீஸாவதில் தாமதமாகிக் கொண்டே வந்தது. லிங்குசாமி தயாரித்த உத்தமவில்லன் மற்றும் அஞ்சான் படங்களின் தோல்வியால் மீள முடியாத கடனில் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இதனால் அவர் தயாரித்த இடம் பொருள் ஏவல் மற்றும் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் ரா ரா ராஜசேகர் படங்கள் ரிலீஸாகாமல் மூன்று ஆண்டுகளாக முடங்கி கிடக்கின்றன. லிங்குசாமியும் மூன்று ஆண்டுகளாக எந்தப் படமும் இயக்காமல் இருந்தார்.தற்போது லிங்குசாமி இயக்கத்தில் சண்டக்கோழி 2 திரைப்படம் தயாராகி ஆயுதபூஜை வெளியீடாக வர இருக்கிறது.

இந்நிலையில் ரசிகர் ஒருவர் டிவிட்டரில் இயக்குனர் சீனு ராமசாமியிடம் இடம் பொருள் ஏவல் படம் எப்போது வெளியாகும் என்ற கேள்வியை எழுப்பி இருந்தார். அதற்கு பதிலளித்த சீனுராமசாமி ’இன்னும் ஓரிரு மாதங்களில். லிங்குசாமி நம்பிக்கை அளித்துள்ளார்’ என்ற தகவலைப் பகிர்ந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அடுத்த கட்டுரையில்
Show comments