Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

படப்பிடிப்பு அனுமதி - ஒரே இடத்தில் பெறுவது எப்படி ?

படப்பிடிப்பு அனுமதி - ஒரே இடத்தில் பெறுவது எப்படி ?
, ஞாயிறு, 3 பிப்ரவரி 2019 (10:28 IST)
கடந்த பிப்ரவரி 1 காலை நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் இடைக்கால நிதியமைச்சர் பியுஷ் கோயலால் தாக்கல் செய்தார். அதில் இந்திய சினிமாத் துறையினருக்குப் பல சலுகைகளை வழங்கினார்.

2019-20 ஆம் நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் இரு தினங்களுக்கு முன்னர் இடைக்கால நிதி அமைச்சர் பியூஷ் கோயலால் தாக்கல் செய்யப்பட்டது. அந்தப் பட்ஜெட்டில் இந்திய திரையுலகிற்கு பயனளிக்கக் கூடிய ஒரு சிறப்பான திட்டத்தை அறிவித்தார்.

இந்திய சினிமாவில் பொது இடங்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான இடங்களில் படப்பிடிப்பு நடத்த அனுமதி வாங்குவது மிகவும் சிக்கலான விஷயமாக இருந்து வருகிறது. படப்பிடிப்பு நடத்தும் இடத்தைப் பொறுத்து காவல் துறை, தீயணைப்புத் துறை, வனத்துறை, இந்திய தொல்லியல் ஆய்வகம் எனப் பல தரப்பிடம் இருந்தும் தனித்தனியாக அனுமதி பெற வேண்டியிருந்தது இதனால் பெரும்பாலான வெளிநாட்டுத் திரையுலகினர் இந்தியாவில் படப்பிடிப்பு நடத்த விரும்புவதில்லை. இந்திய சினிமாவினரும் பாடல் காட்சிகளுக்கு வெளிநாடுகளுக்கு செல்ல விரும்பினர். அங்கேப் படப்பிடிப்பு நடத்துவது எளிதான காரியமாக இருந்தது.

இதனால் வெளிநாட்டுக்காரர்களுக்கு படப்பிடிப்புகளுக்கு எளிதாக அனுமதி வழங்கும் வகையில் செய்தி தொடர்புத் துறையின் கீழ் ‘Film facilitation Office’ எனும் பெயரில் புதிதாக ஒரு அமைப்பை உருவாக்கி அதன் கீழ் ஒரே இடத்தில் இருந்து இந்தியா முழுவதும் உள்ள எந்த இடத்திலும் படப்பிடிப்பு நடத்த அனுமதிப் பெற முடியும் என அறிவித்தது.

இப்போதைய இடைக்கால பட்ஜெட்டில் இந்த ஒற்றைச் சாளர முறையில் இந்தியத் திரையுலகினரும் அனுமதிப் பெற முடியும் என அறிவித்துள்ளனர். இதனால் இந்தியா முழுவதும் படப்பிடிப்பு நடத்த இனி ஒரே இடத்தில் அனுமதிப் பெற முடியும். இதனால் தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கண்ணுபட போகுதும்மா! சுத்திபோட்டுக்கோ...அனுஷ்கா சர்மாவை வாழ்த்தும் ரசிகர்கள்