Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹிப் ஹாப் ஆதி நடிக்கும் ‘வீரன்’ படத்தின் முதல் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்!

Webdunia
வெள்ளி, 31 மார்ச் 2023 (16:04 IST)
தமிழ் திரை உலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஹிப்ஹாப் தமிழா ஆதி ’மீசையை முறுக்கு’ என்ற திரைப்படத்தின் மூலம் கடந்த 2017ஆம் ஆண்டு ஹீரோவானார். அதன் பின்னர் அவர் நடித்த நட்பே துணை மற்றும் நான் சிரித்தால் ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் அவர் நடிப்பில் சிவகுமாரின் சபதம் மற்றும் அன்பறிவு ஆகிய படங்கள் ரிலீஸாகி தோல்வி அடைந்தன. அதையடுத்து தற்போது அவர் மரகத நாணயம் படத்தின் இயக்குனர் ARK சரவண் இயக்கத்தில் உருவாகும் வீரன் என்ற திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் டைட்டில் தற்போது வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் இன்று மாலை 5 மணிக்கு ரிலீஸ் ஆக உள்ளது. பேண்டஸி படமாக உருவாகி வரும் இந்த படத்தில் ‘தண்டர் காரன்’ எனும் பாடல்தான் இன்று மாலை ரிலீஸாக உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments