Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

க்ளைமேக்ஸை நெருங்கும் ராகவா லாரன்ஸின் ஷூட்டிங் !

க்ளைமேக்ஸை நெருங்கும் ராகவா லாரன்ஸின் ஷூட்டிங் !
, செவ்வாய், 24 ஜனவரி 2023 (14:05 IST)
ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் ருத்ரன் திரைப்படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் தற்போது சென்னையில் நடந்து வருகிறது.

நடிகர், நடன இயக்குனர் ராகவா லாரன்ஸ் நடிக்க இருக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது. இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் தயாரிக்க ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளதாகவும், அறிமுக இயக்குனர் ஒருவர் இயக்க இருப்பதாகவும் செய்திகள் முதலில் அறிவிக்கப்பட்டது.

‘ருத்ரன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்ட இந்த படத்தை திடீரென தயாரிப்பாளர் கதிரேசனே இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதையடுத்து சென்னை மற்றும் பொள்ளாச்சியில் படப்பிடிப்பு சில கட்டங்களாக நடந்தது. கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கும் மேலாக இந்த படத்தின் ஷூட்டிங் நடந்துவரும் நிலையில் இப்போது கடைசி கட்ட காட்சிகள் சென்னை பெரும்பாக்கத்தில் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்த இறுதிகட்ட ஷூட்டிங்கோடு மொத்த படப்பிடிப்பும் முடிகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படம் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகும் என்று முன்பு அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தளபதி 67 பட உரிமையைக் கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி நிறுவனம்!