Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விக்ரமனுக்கு கிடைக்காத விருது! கடுப்பான நெட்டிசன்களால் ட்ரெண்டாகும் #BoycottVijayTV

Webdunia
திங்கள், 23 ஜனவரி 2023 (10:06 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் போட்டியில் வெற்றியாளராக அசீம் அறிவிக்கப்பட்ட நிலையில் விஜய் டிவிக்கு எதிராக ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தொடரின் 6வது சீசன் நேற்றுடன் முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிலையில் இந்த சீசனில் ஜிபி முத்து, அசீம், விக்ரமன், ஷிவின், அசல் கோளாறு என பலர் கலந்து கொண்டனர்.

இறுதியில் ஷிவின், விக்ரமன், அசீம் ஆகிய மூவர் மட்டுமே இருந்த நிலையில் இவர்களில் வெற்றியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. முக்கியமாக விக்ரமன், அசீம் இருவருக்கும் இடையே பெரும் போட்டி இருந்தது. இந்நிலையில் நேற்று வெற்றியாளராக அசீம் அறிவிக்கப்பட்டார்.

ஆனால் அசீம் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டது நெட்டிசன்கள் பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பம் முதலே அசீமின் மூர்க்கத்தனமான நடத்தைகள் பலருக்கும் பிடிக்காமல் இருந்து வந்தது. இந்த வெற்றியாளர் அறிவிப்பு நியாயமற்றது என கூறி நெட்டிசன்கள் பலர் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் #BoycottVijayTV என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யார் சார் இவரு..? விபத்துக்கு பிறகும் விடாமுயற்சியோடு வந்து நின்ற அஜித் குமார்! - வாய்பிளந்த ரசிகர்கள்!

சினிமால நீடிக்கணும்னா இதை கத்துக்கோங்க அனிருத்..! அட்வைஸ் செய்த இசைப்புயல்!

சூர்யாவின் ‘ரெட்ரோ’ ரிலீஸ் தேதி.. அதிகாரபூர்வமாக அறிவித்த சூர்யா..!

வெண்ணிற உடையில் கார்ஜியஸ் லுக்கில் கண்ணைப் பறிக்கும் ஜான்வி கபூர்!

டால் அடிக்கும் வெளிச்சத்தில் ஜொலிக்கும் ரகுல் ப்ரீத் சிங்… ஸ்டன்னிங் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments