Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

CWC பிரபலம் நடிப்பில் ஹாரிஸ் ஜெயராஜின் முதல் இசை ஆல்பம் ’வாடி’… ரிலீஸ் தேதி அப்டேட்!

CWC பிரபலம் நடிப்பில் ஹாரிஸ் ஜெயராஜின் முதல் இசை ஆல்பம் ’வாடி’… ரிலீஸ் தேதி அப்டேட்!
, செவ்வாய், 21 ஜூன் 2022 (09:16 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக 2000 ஆம் ஆண்டு முதல் இருந்து வருபவர் ஹாரிஸ் ஜெயராஜ். இவர் கௌதம் மேனன், ஜீவா, கே வி ஆனந்த் மற்றும் ஷங்கர் ஆகிய இயக்குனர்களுடன் இணைந்து கொடுத்த ஹிட் பாடல்கள் எண்ணிலடங்காதவை. ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கான வாய்ப்பு திடீரென குறைய ஆரம்பித்தது. இதே போல அவரது பாடல்கள் பெரும்பாலும் காப்பி அடிக்கப்பட்டவை என்ற குற்றச்சாட்டும், அவரின் சம்பளம் அதிகம் என்ற குற்றச்சாட்டும் தொடர்ந்து வைக்கப்பட்டு வந்தது.

தமிழில் இப்போது அவரிடம் துருவ நட்சத்திரம், மற்றும் லெஜண்ட் ஆகிய படங்கள் மட்டுமே கைவசம் உள்ளன. இந்நிலையில் அவர் முதல்முறையாக தனியிசை ஆல்பம் ஒன்றுக்கு இசையமைத்துள்ளார். CWC பிரபலம் அஸ்வின் குமார் நடிப்பில் உருவாகும் ‘வாடி’ என்ற ஆல்பம் பாடலுக்கு அவர் இசையமைத்துள்ளார். இந்த ஆல்பம் வரும் ஜூன் 29 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த ஆல்பத்தில் பாடலாசிரியர் விவேகா, ஒளிப்பதிவாளர் RD ராஜசேகர் போன்ற முன்னணி கலைஞர்கள் பங்காற்றியுள்ளனர்.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தி வாரியர் படத்தில் வைரல் ஹிட்டான ‘புல்லட்’ பாடல்… அடுத்து ‘விசில்’ பாட்டு ரிலீஸ் அப்டேட்