Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாத்திமா பாபுவுக்கு என்ன ஆச்சு? பிரார்த்திக்கும் பிக்பாஸ் பிரபலங்கள்!

பாத்திமா பாபுவுக்கு என்ன ஆச்சு? பிரார்த்திக்கும் பிக்பாஸ் பிரபலங்கள்!
, திங்கள், 28 ஜூன் 2021 (15:53 IST)
செய்தி வாசிப்பாளினியான பாத்திமா பாபு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு இல்லங்கள் தோறும் பிரபலமாகினார். அதையடுத்து பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். இந்நிலையில் அதிர்ச்சியான செய்தி ஒன்று வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 
 
கடந்த வாரம் முதுகு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் ணனுமதிக்கப்பட்ட பாத்திமா பாபுவுக்கு கிட்னியில் கல் இருப்பது தெரியவந்தது. அதில் சீழ் வைத்து ஆபத்தான கட்டத்தில் இருந்ததால் சுத்தம் செய்துவிட்டு கல்லை உள்ளே தள்ளிவிட்டிருக்கிறார்கள். மேலும் இரண்டு வாரங்களுக்கு பின்னர் தான் அறுவை சிகிச்சை செய்யலாமா வேண்டாமென என்பது குறித்து மருத்துவர்கள் முடிவெடுப்பார்கள். 
 
உடல் நலம் கொஞ்சம் தேறி வீட்டில் ஓய்வெடுத்து வரும் பாத்திமா எல்லோருக்கும் அட்வைஸ் ஒன்றை கொடுத்துள்ளார். அதாவது, நான் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும்போது அரை கிலோ மீட்டர் தள்ளி தான் கழிவறை இருக்கும் அதான் சிறுநீரை அடக்கி வைத்து இப்படி ஆயிற்று. எனவே நீங்கள் எல்லோரும் 3  லிட்டர் தண்ணீர் குடியுங்கள். என  கேட்டுக்கொண்டுள்ளார். இதையடுத்து பிக்பாஸ் பிரபலங்கள் பலரும் பாத்திமாவை  நலன் விசாரித்து அவருக்காக பிரார்த்தனை செய்து வருகின்றனர்.  
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜூலை 15…நல்ல செய்தி வருகிறது அஜித் ரசிகர்களுக்கு!