Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வாய்ப்பு கிடைக்கலன்னாலும் பரவாயில்லை கவர்ச்சியை கையில் எடுக்கமாட்டேன்!

Advertiesment
வாய்ப்பு கிடைக்கலன்னாலும் பரவாயில்லை கவர்ச்சியை கையில் எடுக்கமாட்டேன்!
, வியாழன், 15 அக்டோபர் 2020 (08:56 IST)
தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் சூப்பர் ஹிட் படங்ககளை கொடுத்துவிட்டு பின்னர் வாய்ப்பு கிடைக்காமல் ஆள் அடையாளம் தெரியாமல் போன நடிகைகளின் லிஸ்ட்டை எடுத்து பார்த்தால் நீண்டுகொண்டே போகும். அதிலும் ஒரு சிலர், வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தில் இருந்து வருவார்கள்.

அந்தவகையில் சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதில் ஒரே படத்தில் இடம் பிடித்தவர் நடிகை ஸ்ரீ திவ்யா. அந்த படத்தில் கிராமத்து பெண்ணாக பவ்யமான அழகை வெளிப்படுத்தி நடித்திருந்த அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. கிடைத்த படங்களும் அவ்வளவாக ஓடவில்லை.

இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே தனது சமூகவலைத்தள பக்கத்தில் துளி கூட மேக்கப் போடமல் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்ளை அடியோடு கவர்ந்து வருகிறார். பொதுவாக ஹீரோயின் என்றாலே தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் போவார்கள். கவர்ச்சியில் கபடியே ஆடுவார்கள். ஆனால், நம்ம ஸ்ரீ திவ்யா பட வாய்ப்பே கிடைக்கவில்லை என்றாலும் கொள்ளையை கைவிடாமல் இருந்து வருவது தான் அனைவருக்கும் பிடித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய்சேதுபதியால் ‘மாஸ்டர்’ திரைப்படத்திற்கு சிக்கலா? பரபரப்பு தகவல்