Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இரு வேடங்களில் கலக்கும் “டக்கர்” யோகி பாபு!

இரு வேடங்களில் கலக்கும் “டக்கர்” யோகி பாபு!
, புதன், 8 ஜனவரி 2020 (19:12 IST)
தமிழ் சினிமாவின் தற்போதைய காமெடி கிங் யோகி பாபு எண்ணெற்ற காமெடி கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டார். கோலிவுட்டில் ஒரு காலகட்டத்தில் உச்சத்தில் இருந்த காமெடி பிரபலங்களான சந்தானம், சூரி போன்றவர்களை பின்னுக்கு தள்ளிவிட்டு வடிவேலுவுக்கு பிறகு தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்த்திழுத்து வருகிறார் நடிகர் யோகி பாபு. 
 
சமீபகாலமாக வெளிவரும் பெரும்பான்மையான படங்களில் யோகி பாபுவின் காமெடி இடம்பெற்றுவிடுகிறது. அந்த அளவுக்கு அவரது யதார்த்தமான நடிப்பும்,  உருவ அமைப்பும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்து போக இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் கூடி கொண்டே வருகிறது. அந்தவகையில் தற்போது நடிகர் சித்தார்த் நடிப்பில் இயக்குநர் கார்த்திக் G கிரிஷ் இயக்கும் “டக்கர்” அப்பா மகன் என இரண்டு ரோல்களில் கலக்கலாக நடித்திருக்கிறார் யோகிபாபு. 
 
இப்படத்தில் அவரது கேரக்டர் எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தும் அதே நேரம், வயிறு குலுங்க வைக்கும் காமெடி கலாட்டாவாகவும் இருக்கும். திரையில் அப்பா மகன் என இரு தோற்றங்களில் அவர் வரும்போது அரங்கம் அதிரும் என்கிறார் இயக்குநர். சித்தார்த் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் திவ்யான்ஷா கௌஷிக் நாயகியாக நடிக்கிறார். இரண்டு வேறு வேறு, கோபம் கொப்பளிக்கும்  மனநிலை கொண்ட இருவரும் சந்திக்கும் போது, அவர்களது அளவுக்கு அதிகமான ஈகோ மனநிலையால் அவர்கள் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளை சுவாரஸ்யமாக சொல்லும் கதைதான் “டக்கர்”.  
 
webdunia
ஃபேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் மற்றும் ஜெயராம் இத்திரைப்படத்தை தயாரிக்கிறார்கள். சித்தார்த், திவ்யான்ஷா கௌஷிக், அபிமன்யு சிங், யோகிபாபு, முனீஷ்காந்த், RJ விக்னேஷ் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். வாஞ்சிநாதன் முருகேசன் ஒளிப்பதிவு செய்ய, நிவாஸ் K பிரசன்னா இசையமைக்கிறார். கௌதம்  G A படத்தொகுப்பு செய்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆமா...நான் ஒழுங்கு கெட்டவள் தான் ஆனால், உண்மையானவள்!