Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“பாகுபலி இமேஜில் இருந்து வெளிவர விரும்பவில்லை” – பிரபாஸ்

Webdunia
திங்கள், 9 அக்டோபர் 2017 (18:05 IST)
‘பாகுபலி இமேஜில் இருந்து நான் வெளிவர விரும்பவில்லை” எனத் தெரிவித்துள்ளார் பிரபாஸ்.


 

 
எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் இரண்டு பாகங்களாக வெளிவந்த படம் ‘பாகுபலி’. பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா டகுபதி, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் ஆகியோர் நடித்திருந்தனர். உலகம் முழுவதும் பாராட்டுகளைப் பெற்ற இந்தப் படம், ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்தப் படத்தின் மூலம் கிடைத்த இமேஜில் இருந்து வெளிவர விரும்பவில்லை என்கிறார் பிரபாஸ்.

“இது எனக்குக் கிடைத்த வாழ்நாள் வரம். அதை கடைசிவரை என்னுடனே வைத்துக் கொள்வேன். இவ்வளவு சாதனைகள் படைத்த ‘பாகுபலி’யின் ஹீரோ நான் என்பது பெருமையாக இருக்கிறது. எங்கு போனாலும் மக்கள் என்னை அடையாளம் கண்டு கொள்கின்றனர். தெலுங்கு மக்களுக்கு மட்டுமே தெரிந்த என்னை, உலகம் முழுவதும் கொண்டு சேர்த்திருக்கிறது இந்தப் படம்” என்கிறார் பிரபாஸ். தற்போது ‘சாஹு’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் பிரபாஸ். அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் நடிக்கிறார். தெலுங்கு, தமிழ் மற்றும் ஹிந்தி என ஒரே நேரத்தில் 3 மொழிகளில் தயாராகிறது இந்தப் படம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நெரிசலில் காயம் அடைந்த சிறுவனுக்கு ரூ.2 கோடி.. அல்லு அர்ஜூன் தந்தை அறிவிப்பு..!

’தமிழ்ப்படம் 3’ படத்தின் அப்டேட் கொடுத்த சிவா.. எப்போது படப்பிடிப்பு?

க்ரீத்தி ஷெட்டியின் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட புகைப்படங்கள்!

96 புகழ் கௌரி கிஷனின் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

பாடல்களுக்கு மட்டும் சுமார் 95 கோடி ரூபாய்.. கேம் சேஞ்சர் படம் பற்றி ஆச்சர்யத் தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments