நடிகை அனுஷ்காவிற்கு நிச்சயதார்த்தம்? - மாப்பிள்ளை யார் தெரியுமா?

புதன், 4 அக்டோபர் 2017 (15:31 IST)
நடிகை அனுஷ்காவிற்கு விரைவில் நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.


 

 
பாகுபலி, பாகுபலி-2 உள்ளிட்ட பல படங்களில் நடிகர் பிரபாஸுடன் ஜோடி போட்டு நடித்தார் அனுஷ்கா. எனவே, அவர்கள் இருவருக்கும் இடையே காதல் உருவானதாகவும், அவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள் எனவும்  இதற்கு முன்பே பலமுறை செய்திகள் வெளியானது. ஆனால், இதுகுறித்து அவர்கள் எதுவும் கூறவில்லை.
 
அனுஷ்காவும், பிரபாஸும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என தெலுங்கு சினிமா ரசிகர்களும் பெரிதும் விரும்புவதாக தெரிகிறது.
 
இந்நிலையில், அவர்கள் இருவரும் தங்களின் உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்கிறார்கள் எனவும், வருகிற டிசம்பர் மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் எனவும் இருவருக்கும் நெருக்கமான நண்பர் ஒருவர் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம், அவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள் எனத் தெரிய வந்துள்ளது. 
 
இதைக்கண்ட தெலுங்கு பட ரசிகர்கள் படு குஷியாகியுள்ளனர். ஆனால், அதுபற்றி இப்போது எதுவும் கூற முடியாது. அது என் தனிப்பட்ட விவகாரம். திருமணம் நடக்கும் போது அதுபற்றி கூறுகிறேன் என பிரபாஸ் கூறியுள்ளார்.
 
அதேபோல், இஞ்சி இடுப்பழகி படத்திற்காக உடலில் கூட்டிய எடையை, திருமணத்திற்காகவே அனுஷ்கா குறைத்து வருகிறார் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் அவதார் படம் மூலம் ரீஎண்ட்ரி கொடுக்கும் டைட்டானிக் ரோஸ்