Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’விஜய் 63’ படத்தின் வியாபாரம் எத்தனை கோடி தெரியுமா?

’விஜய் 63’  படத்தின் வியாபாரம் எத்தனை கோடி தெரியுமா?
, திங்கள், 29 ஏப்ரல் 2019 (19:01 IST)
ஏஜிஎஸ் புரொடக்க்ஷன் தயாரிப்பில் அட்லி இயக்கும் புதிய படத்தில் தளபதி விஜய் நடிக்கிறார்.  இது விஜய்க்கு 63 வது படமாகும்.  இதில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவருடன் பரியேறும் பெருமாள் புகழ் கதிர், வில்லனாக பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் உள்பட பலர் நடிக்கிறார்கள். விவேக் பாடல் எழுதுகிறார்.  இந்த படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த தகவல்தான்.
இந்நிலையில் தற்போது அட்லி இயக்கிக் கொண்டிருக்கும் ’விஜய் 63 ‘படத்திற்கு உலக அளவில் பெருத்த எதிர்பார்ப்பு ஏற்ப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
 
இந்நிலையில் படம் எப்போது வெளியாகும் ரசிகர்கள் எதிர்பார்த்து தினமும் இப்படத்தின் செய்திகளை அறிந்துகொள்ள சமூகவலைதலங்களில் புதுப்புது ஹேஸ்டேக்கை உருவாக்கி டிரெண்ட் ஆக்கி வருகின்றனர்.
 
தற்போது வெளியாகியுள்ள முக்கியமான செய்தி என்னவெனில் ’விஜய் 63 ’என்ற இப்படம் ரூ. 200 கோடிக்கு வியாபாரமாகும் என்று தகவல் வெளியாகிறது.
 
மேலும் ஒருவேளை ’விஜய் 63’ படத்திற்கு ரூ. 200 கோடிக்கு மேல் வியாபாரம் ஆனது என்றால், சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அடுத்த  இடத்தில் மிக அதிக தொகைக்கு விற்பனையாகவுள்ளது நடிகர் விஜய்யின் படம்தான் என்று இப்பொழுதே பரவலான பேச்சு எழுகிறது. இதனால் அவரது  ரசிகர்கள் பயங்கர குஷியில் உள்ளனர்.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கபடி விளையாட்டு திரைப்படத்தில் இரண்டு முன்னணி நடிகர்கள்