Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய் பட ஷூட்டிங்கை காண சென்ற ரசிகர்களுக்கு அடி உதை! வீடியோ இதோ.!

விஜய் பட ஷூட்டிங்கை காண சென்ற ரசிகர்களுக்கு அடி உதை! வீடியோ இதோ.!
, செவ்வாய், 19 மார்ச் 2019 (14:02 IST)
தமிழ் சினிமாவின் தலையாய நடிகர் தளபதி விஜய் ரசிகர்களின் முடிசூடா மன்னனாக திகழ்ந்து வருகிறார். இவர் தற்போது அட்லீ இயக்கத்தில் தனது 63 வது படத்தில் நடித்து வருகிறார். கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு வேகம் எடுத்திருக்கும் நிலையில் படப்பிடிப்பு தளத்திற்கு தினமும் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். 

விஜய்க்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து எடுக்கப்பட்ட சில புகைப்படங்களும், வீடியோக்களும் அடிக்கடி  வெளியாகி இணையத்தில் வலம் வருகின்றது. 
 
அந்தகையில் சமீபத்தில் கூட படப்பிடிப்பில் நயன்தாரா கலந்து கொண்ட சில புகைப்படங்கள், வீடியோக்கள்  வெளியாகின. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு வட சென்னைசுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது, எனவே, படப்பிடிப்பை காண தினமும் நுற்றுக்கணக்காக ரசிகர்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றனர். 
 
இந்தநிலையில் நேற்று இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஒரு கடற்கரையில் நடந்துள்ளது.இதனை அறிந்த ரசிகர்கள் ஏராளமானோர் அங்கு கூட,  கூட்டம் அலைமோதியுள்ளது. நேரம் ஆக ஆக கூட்டம்  அதிகரித்ததால்  போலீசார் அவர்களை லேசான தடியடி நடத்தி கலைத்துள்ளனர். இந்த சம்பவத்தில் இரண்டு பேருக்கு லேசான காயமும் ஏற்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிவேகமாக காரை ஒட்டி விபத்து ஏற்படுத்திய பிரபல நடிகை