தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர் அனிருத்தை பாராட்டியுள்ளார் விக்னேஷ் சிவன்.
தனுஷ்- ஸ்ருதி ஹாசன் நடிப்பில், ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் வெளியான படம் 3. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார்.
அதன்பின்னர். வேதாளம், கத்தி, தர்பார், மாஸ்டர், ஜெஸ்ஸி உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்தார்.
இந்நிலையில், நேற்றுடன் தமிழ் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அனிருத்திற்கு 10 வருடங்கள் ஆகிறது.
இதையத்து, நேற்று அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது முதல் பாடம் வெளியாகி 10 ஆண்டுகள் ஆகிறது உங்களது ஆதரவுக்கு நன்றி எனத் தெரிவித்திருந்தார்.
இதற்கு ரீடுவீட் செய்த இயக்குநர் விக்னேஷ் சிவன், இந்த பத்தாண்டு ஆண்டுகால உங்கள் இசை வாழ்வில் நீங்கள் 10 க்கு 10 மதிப்பெண் பெற்றுள்ளீர்கள் எனத் தெரிவித்துள்ளார். மேலும், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நயன் தாரா, சமந்தா, நடிப்பில் அனிருத் இசையமைத்துள்ள படம் காத்துவாக்குல ரெண்டு காதல் விரைவில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.