Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயக்குனர் ஹரியின் கொரோனா சோதனை முடிவு வெளியானது!

Webdunia
திங்கள், 22 மார்ச் 2021 (08:06 IST)
படப்பிடிப்பில் இருந்த இயக்குனர் ஹரி திடீரென சில நாட்களுக்கு முன்னர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பிரபல இயக்குனர் ஹரி தற்போது அருண் விஜய் நடித்து வரும் ’அருண்விஜய் 33’ என்ற படத்தை இயக்கி கொண்டிருக்கும் நிலையில் திடீரென அவர் கடந்த 19 ஆம் தேதி மருத்துவமனையில் கடுமையான காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டார். அவர் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படப்பிடிப்பு பழனி அருகே கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படப்பிடிப்பில் அருண்விஜய் பிரியா பவானி சங்கர் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

படத்தின் படக்குழுவில் உள்ள ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் இதனை அடுத்து படக்குழுவினர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இயக்குனர் ஹரியின் கொரோனா பரிசோதனை முடிவில் அவருக்கு நெகட்டிவ் என வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் கடுமையான காய்ச்சல் அவருக்கு இருப்பதால் இன்னும் சில தினங்கள் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பார் என சொல்லப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ராஜமௌலி & மகேஷ் பாபு படத்தில் இணையும் ஹீரோயின் இவர்தானா?

விடுதலை 2 ஓடிடியில் ரிலீஸாகும் போது ஒரு மணிநேரம் கூடுதலாக இருக்கும்… வெற்றிமாறன் அப்டேட்!

55 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கிறேன்… வைரமுத்து பகிர்ந்த நாஸ்டால்ஜியா அனுபவம்!

ஆர் ஜே பாலாஜியின் சொர்க்கவாசல் ‘ஓடிடி’ ரிலீஸ் பற்றிய தகவல் வெளியானது!

செல்வராகவன் & ஜி வி பிரகாஷ் இணையும் படத்தின் ஷூட்டிங் பூஜையோடு தொடக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments