நடிகை லட்சுமி மேனனை கைது செய்ய தடை.. கேரள உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Siva
வியாழன், 28 ஆகஸ்ட் 2025 (08:06 IST)
கேரளாவில் ஐடி ஊழியர் ஒருவரை கடத்தித் தாக்கிய வழக்கில், நடிகை லட்சுமி மேனனை கைது செய்ய கேரள உயர் நீதிமன்றம் செப்டம்பர் 17-ஆம் தேதி வரை இடைக்கால தடை விதித்துள்ளது.
 
கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி, எர்ணாகுளத்தில் உள்ள ஒரு மதுபான விடுதியில் நடிகை லட்சுமி மேனனின் நண்பர்களுக்கும், ஐடி ஊழியர்கள் அடங்கிய மற்றொரு குழுவிற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த மோதலுக்கு பிறகு, ஐடி ஊழியர் ஒருவரை லட்சுமி மேனன் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து காரில் கடத்திச் சென்று தாக்கியுள்ளனர். இந்த கடத்தலின்போது நடிகையும் உடன் இருந்ததாக கூறப்படுகிறது.
 
தாக்குதலுக்கு உள்ளான ஐடி ஊழியரின் நண்பர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் லட்சுமி மேனன் மற்றும் அவரது நண்பர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில், லட்சுமி மேனனின் நண்பர்களான மிதுன் மற்றும் அனீஷ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.
 
நண்பர்கள் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, நடிகை லட்சுமி மேனன் தலைமறைவானார். இதை கண்டறிந்த காவல்துறையினர், அவரை கைது செய்து விசாரணை நடத்த தேடி வந்தனர்.
 
இந்த சூழ்நிலையில், லட்சுமி மேனன் தரப்பில் முன்ஜாமீன் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்த வழக்கில் நடிகை லட்சுமி மேனனை கைது செய்ய வரும் செப்டம்பர் 17-ஆம் தேதி வரை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘அஞ்சான்’ ரீரிலீஸ்.. சூர்யா என்ன சொன்னார்? மேடையில் கடுப்பான லிங்குசாமி

சினிமாவில் இருந்து விலகுகிறேன்: ’சென்னை 28' நடிகை அறிவிப்பு.. என்ன காரணம்?

ரிவால்வர் ரீட்டாவாகவே மாறிய கீர்த்தி சுரேஷ்… விண்டேஜ் ட்ரஸ்ஸில் கூல் க்ளிக்ஸ்!

இசைக் கச்சேரியில் ஜொலிக்கும் உடையில் கலக்கும் ஆண்ட்ரியா… அசத்தல் க்ளிக்ஸ்!

வழக்கமாக சூப்பர் ஸ்டார்களின் படங்களில் ஹீரோயின்களுக்கு வேலை இருக்காது, ஆனால் … மாளவிகா மோகனன் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments