வருங்கால கணவரை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்திய நிவேதா பெத்துராஜ்!

vinoth
வியாழன், 28 ஆகஸ்ட் 2025 (07:18 IST)
'ஒரு நாள் கூத்து' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை நிவேதா பெத்துராஜ் தமிழ்நாட்டில் பிறந்து துபாயில் வளர்ந்தவர். தமிழில் பொதுவாக என் மனசு தங்கம்’, ‘டிக் டிக் டிக்’ போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். அதே போல தெலுங்கு படங்களிலும் நடித்து வந்தார்.

நடிகர் அஜித்தைப் போலவே நிவேதாவும் கார் ரேஸ்களில் கலந்துகொள்வதில் ஆர்வம் காட்டிவந்தார். துபாயில் நடந்த சில கார் பந்தயங்களிலும் கலந்துகொண்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக அவருக்கு சினிமாவில் பெரியளவில் வாய்ப்புகள் இல்லை.

இந்நிலையில் இப்போது அவர் தன்னுடைய வருங்கால கணவர் ரஜ்ஹித் இப்ரான் என்பவரை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். அவருடன் காதல் வழிய இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள நிவேதா இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக அறிவித்துள்ளார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வா வாத்தியார் படத்தின் ப்ரமோஷன் பணிகள் தொடக்கம்… செகண்ட் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்!

சிரஞ்சீவியை விட விஜய்தான் சிறந்த டான்ஸரா?... ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்ட கீர்த்தி சுரேஷ்!

ரிவால்வர் ரீட்டா ஆக்‌ஷன் படம்தான்… ஆனா குடும்பத்தோட பாக்கலாம் – கீர்த்தி சுரேஷ் உறுதி!

லோகேஷ் கனகராஜின் அடுத்த படம் ‘கைதி 2’ இல்லையா?.. தீயாய்ப் பரவும் தகவல்!

‘அஞ்சான்’ ரீரிலீஸ்.. சூர்யா என்ன சொன்னார்? மேடையில் கடுப்பான லிங்குசாமி

அடுத்த கட்டுரையில்
Show comments