வேலை நாட்களில் சுணக்கம் காட்டும் கூலி.. ஏழாவது நாள் வசூல் எவ்வளவு?

vinoth
வியாழன், 21 ஆகஸ்ட் 2025 (09:19 IST)
தமிழ் சினிமாவின் வசூல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் சமீபத்தைய சென்சேஷன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இணைந்து உருவாக்கிய ‘கூலி’ படம் கடந்த வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் ரிலீஸாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்த படத்தில் சத்யராஜ், நாகார்ஜுனா, சௌபின் சாஹிர், அமீர்கான், உபேந்திரா மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்க, கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

இந்த படத்துக்கு மிகப்பெரிய அளவுக்கு ‘பில்டப்’ கொடுக்கப்பட்டு ரிலீஸான நிலையில் படம் வெளியான முதல் காட்சியில் இருந்தேக் கலவையான விமர்சனங்களைப் பெறத் தொடங்கிவிட்டது. விமர்சனங்கள் வசூலில் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றுதான் சொல்லப்படுகிறது. ஏனென்றால் படம் வெளியாகி 6 நாட்களில் 400 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது.

முதல் நான்கு நாட்களில் மிகப்பெரிய கலெக்‌ஷனை செய்த ‘கூலி’ வேலை நாட்கள் தொடங்கியதும் பெரிம் சரிவை சந்தித்தது. இந்நிலையில் நேற்று ஏழாவது நாளில் இந்திய அளவில் 6.50 கோடி ரூபாய் அளவுக்குதான் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் தமிழ்நாட்டு வசூல் சுமார் 4 கோடி ரூபாய் என சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மனசு கஷ்டப்பட்டுத்தான் போயிருக்காரு.. ஏவிஎம் சரவணன் மறைவிற்கு காரணம்

நான் சிறை செல்ல எனது முன்னாள் மனைவி மஞ்சு வாரியர்தான் காரணம்: நடிகர் திலீப் பகிரங்க குற்றச்சாட்டு

கணவர் ப்ரஜினுக்காக பிக் பாஸ் வீட்டை விட்டு ஓடிய சான்ட்ரா: பரபரப்பு சம்பவம்!

23வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா: திரையிட தேர்வான 12 புதிய தமிழ் திரைப்படங்கள்!

அரசாங்கம் செய்ய வேண்டிய வேலை.. கம்பேக் கொடுத்த கேபிஒய் பாலா.. இதுல சிம்புவுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments