Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அந்த படத்தை திரையிடக்கூடாது ஜெயம் ரவி அப்பாவை எச்சரித்த கமிஷனர்!

Advertiesment
அந்த படத்தை திரையிடக்கூடாது ஜெயம் ரவி அப்பாவை எச்சரித்த கமிஷனர்!
, வெள்ளி, 7 டிசம்பர் 2018 (17:02 IST)
1999ல் நடைபெற்ற கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம்தான் ‘தெளிவுப்பாதையின் நீசதூரம்’. 


 
இந்தப் படத்தை அரவிந்த் என்பவர் இயக்கியுள்ளார். இந்த உண்மை சம்பவத்தை மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல நினைத்தார் இயக்குனர். அதற்காக படத்தை தணிக்கைக்கு அனுப்பினார். படத்தைப் பார்த்த தணிக்கைக்குழு படத்திற்கு சென்சார் கொடுக்க மறுத்து விட்டனர்.
 
மேலும் மறுதணிக்கைக்கு அனுப்பினர் படக்குழுவினர். ஆனால் படம் அங்கேயும் தடை விதிக்கப்பட்டது. 
 
இந்நிலையில் இந்த படத்தை வரும் ஞாயிறு மாலை 6 மணி அளவில் நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ளது ஜெயம் ரவியின் அப்பாவான எடிட்டர் மோகனுக்கு சொந்தமான  எம்.எம்.பிரிவியூ தியேட்டரில் திரையிடப்படுவதாக இருந்தனர். ஆனால் படத்தைத் திரையிடக்கூடாது என்று சென்னை கமிஷனர் அலுவலகம் எச்சரிக்கை கடிதம் அனுப்பியிருக்கிறது.
 
இந்த தியேட்டரில் கடந்த ஏழெட்டு வாரங்களாக சுயாதீன சினிமா அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ மதுபானக் கடை’, போன்ற தரமான படங்களைத் திரையிட்டு வருகிறார்கள்.
 
இந்த வரிசையில் வரும் ஞாயிறன்று சென்சாரால் சர்டிபிகேட் மறுக்கப்பட்ட ‘தெளிவுப்பாதையின் நீச தூரம்’ என்ற படத்தை இலவசமாகத்திரையிட இருப்பதாக அறிவித்திருந்தார்கள். பொதுமக்களிடம் தலைக்கு ஆயிரம் ரூபாய் நிதி திரட்டி, அர்விந்த் என்பவர் இயக்கியிருக்கும் இப்படம் கோவை குண்டு வெடிப்பு தொடர்பான அப்பட்டமான உண்மைகளைப் போட்டு உடைத்திருப்பதாக செய்திகள் உண்டு.
 
இத்திரையிடலுக்கு ஏற்பாடு செய்திருந்த ’தமிழ் ஸ்டுடியோ’ அருண் ‘ஆளும் இந்த அரசு மிக கொடூரமானது. ஞாயிறு தமிழ் ஸ்டுடியோ திரையிட இருக்கும் நண்பர் அரவிந்தனின் ’தெளிவுப்பாதையின் நீச  தூரம்’ திரைப்படத்தை திரையிடக்கூடாது என்று கமிசனர் அலுவலகம் M M திரையரங்கிற்கு கடிதம் அனுப்பியிருக்கிறது. 
 
இதனை எதிர்கொள்ளும் விதம் குறித்து வழக்கறிஞர்களுடன் விவாதிக்கொண்டிருக்கிறேன்’ என்று பதிவிட்டிருக்கிறார் மோகன் .

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2.0 நஷ்டம்: ரூ.556 கோடி வசூலித்து என்ன லாபம்?