Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்ஸார் தடையை மீறி வெளியாகும் தமிழ்ப்படம் !

Advertiesment
சென்ஸார் தடையை மீறி வெளியாகும் தமிழ்ப்படம் !
, வெள்ளி, 30 நவம்பர் 2018 (17:48 IST)
சென்ஸார் போர்டால் தடை செய்யப்பட்ட தமிழ்ப்படமான தெளிவுப் பாதையின் நீச தூரம் டிசம்பர் 9 ஆம் தேதி திரையிடப்படுகிறது என அந்தப் படத்தின் இயக்குனர் அறிவித்துள்ளார்.

தமிழக்த்தில் 1999 ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தை மையப்படுத்தி கோவையைச் சேர்ந்த அரவிந்த் என்ற இயக்குனரால் தெளிவுப் பாதையின் நீசதூரம் என்ற சுயாதீன திரைப்படம் உருவாகியுள்ளது. அந்த படத்தினை வெகுமக்கள் பார்வைக்குக் கொண்டு செல்லும் பொருட்டு தணிக்கைக்கு அனுப்பப்பட்டது.

படத்தினைப் பார்த்த தணிக்கைக் குழுவினர் படத்தினை திரையிட தடை விதித்தனர். இதனையடுத்து படத்தினை மறுதணிக்கைக்கு அனுப்பினர் படக்குழுவினர். ஆனால் படம் அங்கேயும் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த படம் தற்போது மக்களின் பார்வைக்கு திரையிடப் படுகிறது.

இதனை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ள இயக்குனர் ’ வரும் 09/12/2018 அன்று மாலை 6 மணிக்கு சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ”M.M preview theatre” ல் தமிழ் ஸ்டுடியோ சார்பில் “தெளிவுப்பாதையின் நீச தூரம்” திரைப்படம் உங்களின் பார்வைக்கு வந்து சேரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.,

கோவை 1997 கலவரம் நடந்து இன்றுடன் 21 ஆண்டுகள் ஆகிறது., கலவரம் என்கிற காரணத்தை செயற்கையாக கட்டமைத்து 18 அப்பாவி இஸ்லாமியர்களை கொன்ற அந்த வெறிபிடித்த நிகழ்வு உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று வெற்றுப்பெருமை பேசிவரும் இந்த இந்துத்துவ நாட்டில் தான் அரங்கேற்றப்பட்டது.,

இந்த கலவரத்தை மையமாக வைத்து, இந்த கலவரத்தில் புதைந்திருக்கும் உண்மைகளை, ஊடகங்களும் சினிமாக்களும் நம்மிடம் திட்டமிட்டு மறைத்த உண்மைகளை மக்களுக்கு வெளிச்சமிட்டுக்காட்டும் திரைப்படம் ”தெளிவுப்பாதையின் நீச தூரம்”.

1997 கலவரத்தில் நடந்த சம்பவங்களை திட்டமிட்டு மறைத்தது மட்டுமல்லாமல், இந்த சம்பவத்தை மையமாக வைத்து நாங்கள் தயாரித்த இத்திரைப்படத்தையும் தணிக்கை, சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுவிடும் என்கிற பெயரில் இந்த அரசு முடக்கியது.,

ஆனால் இனியும் முடங்க போவதில்லை நாம்., திரையிடலுக்கு அனைவரையும் வரவேற்கிறோம்.’ என தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எழுவர் விடுதலைக்கு ஆதரவாக விஜய்சேதுபதி வேண்டுகோள்!