Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் சேதுபதி பெரிய நடிகர்… 10 வருஷத்துக்கு தேதி கிடைக்காது… சேரன் அளித்த அதிருப்தி பதில்!

Webdunia
சனி, 5 ஆகஸ்ட் 2023 (09:39 IST)
இயக்குனர் சேரன் வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்த நேரத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஒரு கதை சொன்னார். அந்த கதை பிடித்திருந்தாலும் அப்போது விஜய் சேதுபதி பிஸியாக இருந்ததால் சில மாதங்கள் கழித்து அந்த படத்தில் நடிக்க சம்மதித்தார். ஆனால் அதற்குள் சேரனுக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைக்கவே அதில் கலந்துகொண்டார்.

பின்னர் வெளியே வந்த போதும் அந்த படம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் இரண்டு ஆண்டுகளாக சேரன் காத்திருந்த நிலையிலும் அந்த படம் தொடங்கப்படவே இல்லை. இந்நிலையில் இப்போது சேரன் வேறு படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த சேரனிடம் விஜய் சேதுபதி படம் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சேரன் “இப்போது அவர் பெரிய நடிகராகிவிட்டார். அவருக்காக கதையில் மாற்றங்கள் செய்யவேண்டும். இன்னும் 10 ஆண்டுகளுக்கு தேதி கிடைக்காது. அதனால் நான் இப்போது வேறு படங்களில் கவனம் செலுத்தி வருகிறேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹாட் லுக்கிங் போட்டோ ஆல்பத்தைப் பகிர்ந்த திஷா பதானி!

மஞ்சக் காட்டு மைனாவான ரகுல் ப்ரீத் சிங்… கண்கவர் ஆல்பம்!

ஒரு வழியாக இறுதிகட்டத்தை நெருங்கும் விடுதலை 2 ஷூட்டிங்!

ஷாலினிக்கு நடந்த அறுவை சிகிச்சை?... சென்னைக்கு திரும்பாமல் விடாமுயற்சி ஷூட்டிங்கில் அஜித்!

மீண்டும் சிம்பு படம் தொடங்குவதில் சிக்கல்… சம்பளப் பிரச்சனையால் இழுபறி!

அடுத்த கட்டுரையில்
Show comments