Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

'இந்த நாய்க்கு பேர் என்னங்க?' கவுண்டமணி அளித்த பதில். ..வைரலாகும் வீடியோ

'இந்த நாய்க்கு பேர் என்னங்க?' கவுண்டமணி அளித்த பதில். ..வைரலாகும் வீடியோ
, வியாழன், 3 ஆகஸ்ட் 2023 (16:45 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக 80, 90 களில் வலம் வந்தவர்  கவுண்டமணி.  ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சரத்குமார், ராமராஜன், கார்த்திக், விஜய்,  அஜித், சிம்பு ஆகிய முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து அசத்தினார்.

இதுவரை 450க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர் 10 படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன் எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த நிலையில்,  மீண்டும் நடிகர் கவுண்டமணி ஒத்த ஓட்டு முத்தையா என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இவருக்கு ஜோடியாக ராஜேஸ்வரி நடிக்கவுள்ளார். இப்படத்தை சாய் ராஜகோபால் இயக்கவுள்ளார். இப்படத்தில் கவுண்டமணியுடன் இணைந்து மொட்டை ராஜேந்திரன், யோகிபாபு, தம்பிராமையா, மாரிமுத்து உள்ளிட்ட பலரும் நடிக்கவுள்ளனர்.

நடிகர் கவுண்டமணியை மீண்டும் திரையில் காண ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற சினிமா நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனர் ராமதாஸ், ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு கஷ்டம் வரும். டிக்ஷனரி மாதிரி கவுண்டமணி காமெடி வைத்துக் கொண்டால் வாழ்க்கை ஈஷியாக இருக்கும் என்றார்.

மேலும், எனக்கு கல்யாணம் 1989 ல் கவுண்டமணி சாருக்கு பத்திரிக்கை வைக்க அவரது வீட்டிற்குச் சென்றிருந்தேன். என்னை வரவேற்றார் அவர்.  நான் உட்கார்ந்தபோது பக்கத்தில்  நாய்  இருந்தது. இதற்கு என்ன பெயர் என்று அவரிடம் கேட்டேன். அதற்கு அவர் உடனே, அதுக்கு என்ன பேரு…நாய் தான்! இதுக்கு ஒரு பேர் வைச்சு, அதை வேற நியாபகம்  வைச்சிருந்து அதைவேற கூப்பிடனுமாக்கும்!  கவுண்டமணி கல்யாணத்திற்கு வந்ததுக்கு அப்புறம்தான் எனக்குப் பொண்ணு கொடுத்தவங்களே என்ன  நம்புனாங்க என்று நகைச்சுவையாக கூறினார். விழாவில் பங்கேற்ற  சந்தானம் உள்ளிட்ட அனைவரும் சிரித்தனர்.

இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜி வி பிரகாஷ் & ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் டியர் படத்தின் ஷூட்டிங் நிறைவு!