பிரபல நடிகர் அஜித்குமார் தொடர்ந்து கார் ரேஸில் ஈடுபட்டு வந்த நிலையில் மீண்டும் படம் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் அதிகமான ரசிகர்களை கொண்ட நடிகர்களில் முக்கியமானவர் அஜித்குமார். சினிமா தவிர கார் ரேஸிலும் மிகுந்த ஆர்வம் கொண்ட அஜித்குமார். கடந்த சில ஆண்டுகளாக கார் ரேஸுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார்.
கடைசியாக இவர் நடித்த விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்கள் அடுத்தடுத்து வெளியாகி ஹிட் ஆனது. ஆனால் அதற்கு பிறகு உலக நாடுகளின் கார் ரேஸ்களில் அஜித் கலந்து கொள்ள சென்றுவிட்டதால் புதியப்படம் எதுவும் ஒப்பந்தம் ஆகவில்லை.
ஆனால் குட் பேட் அக்லியை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரனே அடுத்த படத்தையும் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தது. இந்நிலையில் உலக கார் ரேஸ் போட்டிகளின் சீசன் முடிவடைந்துள்ளது. இதனால் சற்று ஓய்வுக்கு பின் அடுத்த படத்தில் அஜித் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் AK64 பட அப்டேட் வெளியாகலாம் என்ற தகவல் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Edit by Prasanth.K