Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ் சாண்டி நடிக்கும் 3:33 டீசர் வெளியீடு

Webdunia
ஞாயிறு, 27 ஜூன் 2021 (15:58 IST)
பிக்பாஸ் சாண்டி நடிக்கும் 3:33 டீசர் வெளியீடு
பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர்களில் ஒருவரான சாண்டி மாஸ்டர் நடித்துவரும் 3:33 என்ற திரைப்படம் கடந்த சில மாதங்களாக படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் டப்பிங் பணிகளும் முடிவடைந்து விட்டதாக கூறப்பட்டது
 
இந்த நிலையில் விரைவில் 3:33 திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸாகும் என்று கூறப்படும் நிலையில் தற்போது இந்த படத்தின் டீஸர் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் டீசரில் சாண்டியின் திகில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன என்பதும் இந்த டீசரில் இருந்து இது ஒரு அட்டகாசமான பேய் படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது
 
மேலும் இந்த படத்தில் பிக்பாஸ் போட்டியாளர்களான சரவணன், ரேஷ்மா உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள் என்பதும், இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நம்பிக்கை சந்த்ரு என்பவர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஹர்ஷவர்தன் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அக்ஷய் குமார் பெயரை பயன்படுத்தி தமிழ் நடிகை மோசடியா? தயாரிப்பாளரின் அதிர்ச்சி புகார்..!

3 நாளில் ‘மகாராஜா’ வசூல் இத்தனை கோடியா? தயாரிப்பாளரின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

டபுள் ஐஸ்மார்ட்’ திரைப்படம் திரையரங்குகளில் ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகிறது!

ஆஹா வழங்கும் ‘வேற மாறி ஆபீஸ் - சீசன் 2’வெப் சீரிஸ் பூஜையுடன் துவங்கியது!

'சௌகிதார்' எனும் புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை 'ரோரிங் ஸ்டார்' ஸ்ரீ முரளி வெளியிட்டார்!

அடுத்த கட்டுரையில்
Show comments