Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கடைசியா இதான் கிடைச்சுதாப்பா...? சீரியல் நடிகைக்கு ஜோடியான தர்ஷன்

Advertiesment
கடைசியா இதான் கிடைச்சுதாப்பா...? சீரியல் நடிகைக்கு ஜோடியான தர்ஷன்
, புதன், 26 ஆகஸ்ட் 2020 (12:36 IST)
பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பல போட்டியாளர்களுக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு சாதாரணமாக கிடைத்து விடும். பெரும்பாலான போட்டியாளர்கள் தாங்கள் விரைவில் முன்னேற வேண்டும் என நினைத்து தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள்.

அந்தவகையில் மூன்றாவது சீசனில் பங்கேற்று மக்களிடம் நல்ல பெயரை பெற்றவர்களுள் ஒருவர் தர்ஷன். மக்களின் ஒட்டு அதிக அளவில் பெற்று சக போட்டியாளர்களை விட ஒரு படி முன்னிலை வகித்து வந்த தர்ஷன் கடைசி நேரத்தில் பிக்பாஸில் இருந்து எவிக்ட் செய்யப்பட்டார். பின்னர் பிக்பாஸில் இருந்து வெளியே வந்ததும் நடிகை சனம் ஷெட்டியை காதலித்துவிட்டு திருமணம் செய்து கொள்கிறேன் என கூறி ஏமாற்றி விட்டதாக பெரிய சர்ச்சையில் சிக்கினார்.

அந்த சர்ச்சையில் இருந்து மீண்டு வந்த தர்ஷன் தொடர்ந்து படங்களில் முயற்சித்து வருகிறார். அந்தவகையில் கமல் ஹாசனின் இந்தியன் 2 படத்தில் படத்தில் முக்கிய ரோலில் நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால், அந்த வாய்ப்பும் பின்னர் பறிபோக தற்ப்போது சத்யா சீரியலில் நடித்து புகழ் பெற்ற ஆயிஷாவுடன்  தாய்க்கு பின் தாரம் என்ற ஆல்பம் பாடலில் நடித்துள்ளார். சித் ஸ்ரீராம் பாடியுள்ள இந்த பாடலின் டீசர் நாளை வெளியாகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

46 ஆண்டுகளுக்கு முன் வைத்த அதே டைட்டில்: மீண்டும் களத்தில் இறங்கும் ஏவிஎம்