Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தெறி 2 படம் குறித்து பதிவிட்ட பிரபலம் - கொண்டாட்டத்தில் தளபதி ரசிகர்கள்!

தெறி 2 படம் குறித்து பதிவிட்ட பிரபலம் - கொண்டாட்டத்தில் தளபதி ரசிகர்கள்!
, திங்கள், 27 ஜூலை 2020 (13:14 IST)
விஜய் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டில் வெளிவந்து சூப்பர் த அடித்த படம் தெறி. அட்லீ இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் ஏமி ஜாக்சன், சமந்தா, ராதிகா சரத்குமார், பிரபு , இயக்குனர் மகேந்திரன் என பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.

கலைப்புலி எசு. தாணு தயாரித்த இப்படத்திற்கு  ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார்.   ஜார்ஜ் சி. வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருந்த இப்படத்தில் நடிகை மீனாவின் மகள் நைனிகா குழந்தை நட்சத்திரமாக நடித்து மிகப்பெரிய அளவில் ஹிட் அடிக்க முக்கிய காரணமாக இருந்தார். நேற்று சன் டிவியில் இப்படம்  ஒளிபரப்பானது.

படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் தங்களது மனம் கவர்ந்த சீன் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் தற்ப்போது பிக்பாஸ் தர்ஷன் தனது ட்விட்டர் பக்கத்தில், யாரெல்லாம் DCP விஜயகுமாரை தெறி 2வில் மீண்டும் பார்க்கவேண்டும் என்று ஆர்வமாக உள்ளீர்கள் என்று பதிவிட்டு ஆர்வத்தை துண்டியுள்ளார்.  ரசிகர்கள் மத்தியில் தர்ஷனின் இந்த ட்வீட் வைரலாக மீண்டும் தெறி 2 கூட்டணி இணைந்தால் பிளாக் பஸ்டர் ஹிட் அடிக்கும் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மதுரைக்கு ஷூட்டிங் வரும் பாலிவுட் பட்டாளம்: தனுஷின் புதிய பட அப்டேட்!