Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 டேஸ் டூ கோ... பிக்பாஸ் 4 புதிய ப்ரோமோ இதோ!

Webdunia
வியாழன், 1 அக்டோபர் 2020 (11:01 IST)
பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சியின் 3 சீசன்கள் முடிவடைந்து தற்போது நான்காவது சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது. இது குறித்த முதல் புரோமோவை நடிகர் கமலஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டதை அடுத்து பிக்பாஸ் நான்காவது சீசன் உறுதி செய்யப்பட்டது.

கடந்த ஜூன் மாதமே ஆரம்பிக்கவேண்டிய பிக்பாஸ் 4 சீசன் கொரோனா உரடங்கினாள் தள்ளி சென்று வருகிற அக்டோபர் 4ம் தேதி மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. கடந்த ஒரு மாத காலமாகவே இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொள்பவர்களின் பெயர்கள் தொடர்ந்து அடிபட்டு வருகிறது.

அந்தவகையில் ஷிவானி நாராயாணன், சனம் ஷெட்டி, கேப்ரில்லா, நடிகை ரேகா, ரம்யா பாண்டியன், தொகுப்பாளினி அர்ச்சனா அறந்தாங்கி நிஷா, ஆண் போட்டியாளர்கள் ஆஜித், வேல்முருகன், நடிகர் ஆரி, மாடல் பாலாஜி முருகதாஸ், ஜித்தன் ரமேஷ், அனுமோகன் என மொத்தம் 13 பேர் பங்கேற்க உள்ளதாக உறுதிப்படுத்தாத தகவல்கள் வெளியாகியது.

இந்நிலையில் சற்றுமுன் விஜய் தொலைக்காட்சி பிக்பாஸ் 4 நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோவை வெளியிட்டு பார்வையாளர்களை அலார்ட் செய்துள்ளனர். இந்த ப்ரோமோ வீடியோவில் தொகுப்பாளர் கமல் ஹாசன்,  " நாம முகத்துல மாஸ்க் போட்டுக்கிட்டு இருக்கிறோம். ஆனால், மாஸ்க்கே முகமா போட்டுக்கிட்டு இருக்கிறவங்க நிறைய பேர் இருக்காங்க... 3 டேஸ் டூ கோ பிக்பாஸ்" என பன்ச் டயலாக் பேசி எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

செஸ் சாம்பியன் குகேஷை சந்தித்து பரிசளித்த சிவகார்த்திகேயன்!

கமல்ஹாசனுக்காக எழுதிய கதையை மம்மூட்டியை வைத்து இயக்கும் பிரபல இயக்குனர்!

மீண்டும் தாணு தயாரிப்பில் படம் நடிக்கும் விஜய் சேதுபதி!

சல்மான் கான் பிறந்தநாளில் வெளியாகும் ‘சிக்கந்தர்’ ப்ரமோஷன் வீடியோ!

நாளை வெளியாகிறது விடாமுயற்சி படத்தின் முதல் சிங்கில் ‘Sawadeeka’!.. டிரைலர் எப்போது?

அடுத்த கட்டுரையில்
Show comments