Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்யாண செய்தி கூறிய பிக்பாஸ் ஷெரின் - ரசிகர்கள் வாழ்த்து!

Webdunia
சனி, 23 மே 2020 (08:21 IST)
கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பெரிய அளவில் பேமஸ் ஆனவர் நடிகை ஷெரின். ஆனால் அவர் இதற்கு முன் சிறுவயதாக இருந்தபோதே ஒரு சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். “அழகிய அசுரா, அழகிய அசுரா” என்ற பாடலில் ஷெரின் எஸ்பிரஷனில் பலரும் மயங்கியதுண்டு.

அதையடுத்து செல்வராகவன் இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷுடன் சேர்ந்து நடித்துள்ளார். தனுஷின் முதல் படமான இதில் ஷெரின், அபிநய்,ரமேஷ் கண்ணா,தலைவாசல் விஜய்,விஜயகுமார், ஷில்பா போன்ற பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்தாலும் அவரை பிரபலப்படுத்தியது என்னமோ பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.

இந்நிலையில் பிரபல இணையதள சேனல் ஒன்றிற்கு பேட்டி கொடுத்த ஷெரினிடம் திருமணம் குறித்து கேட்டதற்கு பதிலளித்த அவர், திருமணம் செய்துகொள்வதற்கு ஏற்ற நபர் நம் வாழ்வில் யாராவது இருக்கவேண்டும். ஆனால் , அப்படியான நபர் தற்போது என்னுடைய வாழ்வில் இல்லை. ,மேலும், இது கொரோனா லாக்டவுன் என்பதால் நான் வீட்ற்குள்ளேயே என்னுடைய  இளவரசருக்காக காத்திருக்கிறேன் என கூறி வெட்கத்துடன் பதிலளித்தார். இதை அறிந்து அவரது ரசிகர்கள் பலரும் உங்களுக்கு ஏற்ற ராஜகுமாரன் கிடைக்க வாழ்த்துக்கள் என கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

அடுத்த கட்டுரையில்
Show comments