Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரு வேலை சாப்பாடு... போட்டுக்க துணி இல்ல - கலங்கிய இசைவாணி!

Advertiesment
ஒரு வேலை சாப்பாடு... போட்டுக்க துணி இல்ல - கலங்கிய இசைவாணி!
, செவ்வாய், 5 அக்டோபர் 2021 (10:45 IST)
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி விஜய் டிவியில் இரண்டு நாட்களாக ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கின்றன. இதில் ராஜு மற்றும் ப்ரியங்காவின் காமெடி அனைவருக்கும் பிடித்துவிட்டது. அபிஷேக் அடிக்கடி மொக்கை வாங்குகிறார். இன்னும் டாஸ்க், எவிக்ஷன், நாமினேஷன் என வந்துவிட்டால் நிகழ்ச்சி சுவாரஸ்யம் அடைந்துவிடும். 
 
இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள முதல் ப்ரோமோவில் போட்டியாளர்கள் தாங்கள் முன்னேறி வந்த பாதைகளை குறித்து சக போட்டியாளர்களிடன் பகிர்ந்துக்கொள்கின்றனர். அதில் இசை வாணி தான் மிகவும் கஷ்டப்பட்டு இந்த நிலைமைக்கு வந்துள்ளதாக கூறினார். 
 
என்னுடைய அப்பா முதலில் ஹார்பாரில் வேலை பார்த்தார். அதன் பிறகு அப்பாவுக்கு வேலை போயிடுச்சு அந்த சமயத்தில் சாப்பிட சாப்பாடு கூட இல்லை ஒரு வேலை சாப்பாடு. போட்டுக்க துணி மணி இல்லை. வீடு வாடகை கொடுக்க முடியததால் வீட்டை விட்டு அனுப்பிடுவாங்க என்றெலாம் கூறி கலங்கினார். 

கஷ்ட படுறவங்க கண்டிப்பாக ஒருநாள் பெரிய ஆளா வருவாங்க அதிகமான கஷ்டங்களை அனுபவித்தவர்கள் தான் யாரும் தொடமுடியாத உயரத்திற்கு செல்வார்கள் நீங்கள் உயரத்திற்கு சென்றுவிட்டீர்கள் கவலைப்படாதீங்க இசைவாணி என பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர். 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மின்னல் வேகத்தில் படப்பிடிப்பை முடித்து ஜீத்து ஜோசப்… ஓடிடிக்கு அடுத்த படம் ரெடி!