Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மின்னல் வேகத்தில் படப்பிடிப்பை முடித்து ஜீத்து ஜோசப்… ஓடிடிக்கு அடுத்த படம் ரெடி!

மின்னல் வேகத்தில் படப்பிடிப்பை முடித்து ஜீத்து ஜோசப்… ஓடிடிக்கு அடுத்த படம் ரெடி!
, செவ்வாய், 5 அக்டோபர் 2021 (10:40 IST)
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் 12த் மேன் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.

பிரபல மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடித்து மிகப்பெரும் ஹிட் அடித்தப்படம் திருஷ்யம். இந்த படம் தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் பாபநாசம் என்ற பெயரிலும், இந்தியில் அஜய் தேவ்கன் நடிப்பில் திருஷ்யம் என்ற பெயரிலும் ரீமேக் ஆனது. சமீபத்தில் திருஷ்யம் இரண்டாம் பாகமும் ஓடிடி மூலமாக வெளியாகி பெரும் ஹிட் அடித்தது.

இந்நிலையில் மீண்டும் இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கிறார். 12த் மேன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம் த்ரில்லர் வகை படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் இப்போது முழு படப்பிடிப்பையும் நடத்தி முடித்துள்ளனர் படக்குழுவினர். திருஷ்யம் 2 போலவே இந்த படமும் ஓடிடியில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நயன்தாராவின் அடுத்த படத்தில் கவின்!