Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

யோவ்... என்ன நாமினேட் பண்ண வேற காரணமே இல்லையா....? கடுப்பான ஷிவானி!

Advertiesment
Bigg Boss 4
, திங்கள், 30 நவம்பர் 2020 (12:49 IST)
பிக்பாஸ் வீட்டிலிருந்து நேற்று சம்யுக்தா வெளியேறினார். அதையடுத்து இன்று நாமினேஷன் ஆரம்பித்துள்ளது. இதில் சனம் ஷெட்டி , ஆரி , ஷிவானி உள்ளிட்டோர் அதிகம் நாமினேஷனில் சிக்கியுள்ளனர். ஆரி வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களால் தொடர்ந்து வெறுக்கப்பட்டு வந்தாலும் வாரம் வாரம் அவர்களின் ஓட்டுக்களை அதிகம் பெற்று வருகிறார்.
 
இது இப்படியே தொடர்ந்தால் நிச்சயம் ஆரி தான் டைட்டில் வின்னர் அடிப்பார் என யூக்கியப்படுகிறது. இந்நிலையில் இன்று ஷிவானி பக்கம் ஆடியன்ஸ் வெறுப்பை காட்டி வருகின்றனர் அடுத்ததாக ஷிவானி தான் வீட்டை விட்டு வெளியேறவேண்டும் என கூறி வருகின்றனர்.
 
காரணம் பிக்பாஸ் வீட்டில் பாலாவின் பின்னால் சுற்றித்திரிவதை தவிர ஷிவானிக்கு வேற வேலையே இல்லை. அர்ச்சனா கூறுவது போலவே பாலாவின் நிழலிலும் ஷிவானி தான் இருக்கிறார்.  ஆனால், ஷிவானியை வெளியேற்றிவிட்டால் பாலாவுக்கு கன்டென்ட் குறைந்துவிடும். இப்போதைக்கு பாலா தான் பிக்பாஸ் சொத்து என்பதால் பாலாவுக்காகவாவது ஷிவானியை வெட்டியாக வைத்திருக்கிறது விஜய் டிவி. 
 
இலையில் தற்ப்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில் நாமினேட் செய்ததற்கான காரணங்களை பிக்பாஸ் கூற ஒரே காமெடியாக இருந்தது. இதில் ஷிவானி பாலாவுடன் கோர்த்து விட்டு நாமினேட் செய்துள்ளதை கேட்டு...  " யோவ் வேற ரீசனே இல்லையா உங்களுக்கு நாமினேட் பண்ண என கடுப்பாகிவிட்டார். " ஷிவானி தயவு செய்து நீ வெளியில் வந்திடு பாலா பொழப்பில் மண் வாரி போடாத உண்ண வெட்டியா உள்ள வச்சிருக்காங்க விஜய் டிவி. 
 
நாமினேஷன் பண்ண ஆயிரம் ரீசன் இருக்கு. ஆனால் உன்னை நாமினேட் பண்ண முக்கியமானா ரீசன் பாலா கூட சுத்துறது தான். அப்பறோம் ரம்யா  ஆரியை பார்த்து  " அவரது கோபத்தின்  வெளிப்பாடு எதிரில் இருப்பவரை பயமுறுத்துகிறது” என கூறியுள்ளார். உண்மையா இருப்பவரை, அமைதியா ஒதுங்கி இருப்பவரை தேவையில்லாமல் நோண்டினால் அதன் வெளிப்பாடு அப்படித்தான் இருக்கும். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கமல்-செல்வராகவன் படம் டிராப் ஆனது ஏன்?