Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக் பாஸ் சீசன் 3.! முதல் போட்டியாளரே சர்ச்சை நடிகையா? யாருன்னு பாருங்க!

Webdunia
வெள்ளி, 8 மார்ச் 2019 (14:53 IST)
கடந்த 2017ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக் பாஸ்.  ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற இந்த நிகழ்ச்சி சீசன் 1 , சீசன் 2 , என்ற இரண்டு பாகமும் பட்டிதொட்டியெங்கும் பரவியது.


 
கமல் தொகுத்து வழங்கி மாபெரும் வெற்றிபெற்ற  இந்நிகழ்ச்சியின் மூன்றாம் பாகம் எப்போது வெளியாகும் என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த வேளையில் இந்நிகழ்ச்சியின் தயாரிப்பு நிறுவனமான எண்டிமால் நிறுவனம், தமிழில் இந்த ஆண்டு பிக் பாஸ் 3 வது நிகழ்ச்சி நடத்துவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு சில மாதத்தில் இதற்கான ஒப்பந்தம் போடப்படும் என்று தெரிவித்துள்ளனர். தற்போது மூன்றாவது சீசனில் நடிகை கஸ்தூரி கலந்துகொள்வார் என்று கூறப்படுகிறது. 
 
நடிகை கஸ்தூரி கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியிலேயே கலந்து கொள்வார் என்று பலராலும் எதிர்பார்க்கபட்ட நிலையில் தற்போது மீண்டும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மும்மரமாக பேச்சு வார்த்தை நடந்துவருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் உலா வந்துகொண்டிருக்கிறது
 
கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற போட்டியாளர்களால் நிகழ்ச்சியை சுவாரசியமாக எடுத்துச்செள்ள முடியவில்லை. எனவே, தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வரும் கஸ்தூரியை வைத்து நிகழ்ச்சியை ஸ்வாரசியமாக கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளதாம் எண்டிமால் நிறுவனம். 


 
ஆனால் இது எந்த அளவிற்கு உண்மையென்பது பின்னரே தெரியவரும் எனவே, மூன்றாவது சீசனில் கஸ்தூரி கலந்த்துகொள்வாரா இல்லையா என்பது பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கிய பின்னரே உறுதியாக கூறப்படும். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நாளை வெளியாகிறது விடாமுயற்சி படத்தின் முதல் சிங்கில் ‘Sawadeeka’!.. டிரைலர் எப்போது?

ஈரம் பட கூட்டணியின் அடுத்த படம் ‘சப்தம்’.. ரிலீஸ் தேதி இதுதான்!

நடிகர் சிவராஜ்குமாருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்தது…!

விடாமுயற்சி படத்தின் அனைத்துப் பணிகளையும் முடித்துக் கொடுத்த அஜித்!

ஒரு மாபெரும் எழுத்துக்கலைஞனை இழந்திருக்கிறோம்.. கமல்ஹாசனின் சோக பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments